Thursday, April 29, 2010

மசூதி தெரு

மசூதி தெரு

(தென்னை மரம் நீண்டு தலையாட்டும் ....
பச்சை மாடத்தில் வெள்ளை ஒளி பட்டு என் கண் சிமிட்டும் ...
.....பிறை கோலங்கள் நிறைய கிடக்கும் என் மசூதி தெரு ...மனதை நனைக்கிறது )

பாம்பு கடித்தபோது தூக்கி சென்றார்கள் ....
முதலியார் வீட்டு முன்பு ....அவர் கட்டு போடும் மந்திரகரர்ர்
...மணி அதிகாலை அஞ்சி....
அவர் குறட்டை கலைவதற்குள் ...ஏன் உயிர் கலைந்துடுமோ ...என ...
... என் தாய் கதறல் .....அய்யா அய்யா ....கொஞ்சம் சீக்கிரம் பாருங்க அய்யா ....

.....புள்ள பட்னதுல படிக்குது ....தெரியாத கொள்ளிபக்கம் போய்....எதோ கடிச்சிடிச்சி ...
....நான் சென்றது அவர் கொல்லைவெளி ..என அம்மாவுக்கு ...புரியல ...

....தெ... அஞ்சல இன்னா ஒரே கத்தா கதற .....
.. சும்மா இரு ..முதலியார் மிரட்டல் ....
.அஞ்சலைக்கு தானே தெரியும் புள்ளை வலி ....
.... அன்று சும்மா கேவ்ருதண்டு கீரிடிச்சி ..
.மூணு நாளா...கரிசலாங்கண்ணி தழை அறைச்சி..... தடவணா ....

...இன்னிக்கு பாம்பு கீரிடிச்சி சும்மாவா இருப்பா பறைச்சி .....
....என் அப்பன் நேத்து அடிச்சசாரயதுல ...தென்னன்கீதொட ...முத்தம் ...

...அம்மாவின் குரலில் முதல் சேரியும்....
பின்பு முதலியார் தெருவும் ..எழுந்துகிசி ......
....நான் சொன்னேன் மன்னடிபட்டு ஆஸ்பிடல் ல ...போவலன்னு ...
...அம்மா சொன்னால் முதலியார் ராசிக்காரர் இன்னு ......

ஆனா ......ஒரு சில குழப்பம் அவர்க்கு .....
இந்த பயதான் ....சின்ன முதலியார் பொண்ண ..பள்ளிகொடம் போகும்போது ...பழகனது ....
... என் மரவள்ளி கொள்ளையில் பிடுங்கி தின்ன யோசனை சொன்னது ......
......தண்ணி பாச மறுத்தது ......இன்னும் .. பல சாடல் ...
.... நான் புரிந்து கொண்டேன் .....நமக்கு சங்கு உறுதி என்று .......

.......முதலியாரோ .....தா அஞ்சல ....இன்னிக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது .....
...அம்மா அலறினாள் ...அய்யா .. ஐயோ .....என ....

...ஆமா அஞ்சல ....தேங்க பழம் இல்லாம வந்திருக்க ....
,...அப்புறம் நான் வேற ...ராத்திரி மீன் கொழம்புனால ....
காலைலியே......என் பொன்டடிகிட்ட .......க்கம்...அதான்.....

.....நான் எதிர்வீட்டு புண்ணாக்கு மாமாவிடம் ....யௌ ...
... சீக்கிரம் ஓடி உன் ஓட்ட சைக்கிள் ...எடுத்தா ...

...திருக்கனூர் மசுதிக்கு ஓடுவோம் ........
அம்மா சொன்னால் ... ..டே இருடா ...அப்பிடி சொல்லாத .....
....ஏய் .... எனன சாவ அடிச்சிடுவான்....போ. கம்முனு இரு ,.....
....அவன் பொண்டாட்டி ....வேற ...அவன கூபிடுரா ..........

......சாவுக்கு பயந்தேன் என்றால் ...அமாம் ....
...புண்ணாக்கு மாமா ....தன ரத்தம்..சொட்ட ..உடைந்த பெடலை மிதிக்க ...
....நான் அவர் தோல் மேல் கால் போட்டு விழம் ஏறாமல் ....
...மசுதிக்கு ....ஓட ...வரிசையில் ....இருந்தார்கள் ......மக்கள் .......

.....திருமங்கலம் வழி ஓடியே வந்த என் அம்மா ....
....பாய்...பாய் ....என் புள்ளைய காப்பாத்துங்க .....பாம்பு கடிச்சிடுச்சு .......

.......அவள் குரல் செட்டியார் வீட்டு தெரு முழுதும் ....
.........எதிரொலித்தது .....அவள் அழை சிரபுஞ்ச்யை விட ....அத்திகநேரம் ....கொட்டியது ....
மாறியதா தாயே என் புள்ளைய காப்பது யாரு ......
என மசூதி எதிரே இருந்த சின்ன செங்கல் சாமியிடம் சொன்னால் ....
...நான் சொன்னேன் அம்மா இது முஸ்லிம் கோயில் ....மாரியாத்தா சொல்லாதேன்னு ...
பாய் சாமி கோச்சுக்குவார் .....

......பாய் சொன்னார் ..தம்பி ,,,நீ இங்க வாடா ....என்னை முதலில் இறுக்கி அணைத்தார் ....
....அப்போதே நான் பிழைதுக்கொண்டதாய் ...நினைத்தேன் ....

.....சிறிய நூல் எடுத்து குரான் ஓதி..பாம்பு கடித்த இடத்தை சுற்றி கட்டினார் ....
.......கொஞ்சம் நேரம் இருக்க சொல்லி போக சொன்னார் ......
...என் அம்மா உப்பு ... வேப்பிலை ....வாயில் தினித்தாள்...நான் .....
...கறிபதாகவும்...கசபதாகவும் .....துப்பினேன் ...அபோதுதான் அவள் அழை நின்னது .....

......அந்த பச்சை கலர் புடவையால் என் வாய் துடைத்தாள்...
...நான் அப்போது பதினெட்டை தாண்டிய ...பாசக்காரன் அவளுக்கு ......

...நான் நாளை மெட்ராசுக்கு போறேன் என்றேன் .....
...அவளோ வேகமாய் ஓடி ...பாயிடம் ....கேட்டாள்.....
.....அய்யா சாமி ....புள்ளைய மெட்ராசுக்கு அனுபலாம இன்னு ...
.....அவரோ டெல்லிக்கு கூட அனுப்பு இன்னா பிரச்னை ......
..........

,.......இன்று சப்டர்சங் மடரஸ்ஸ....டில்லி சாலையில் ...எப்போது போனாலும் ......
....வெள்ளிதோறும் முழங்கும் அல்லா ஓதலும் .......
......மெக்காவை...நோக்கி ..யார் தொழிகிரபோதும் ........

எனக்கு .....திருக்கனூர் ....மசூதி தெருவும் ....
...என் அம்மாவின் ...பாசமும்தான் .......என் இமைகளை நனைக்கிறது......

நான் எந்த மதம் என்று தெரியவில்லை ....
...ஆனால் ..இந்து மதம் இல்லை என மட்டும் தெரியும் .
....


பாசக்காரன்
வீரமணி ........

No comments:

Post a Comment