

ஒபாமாவும் எங்க அப்பா அம்மாவும் ............
.....அந்த கருங்குழி படர்ந்த கென்யா கரையோரம்...
நீ தலைதெறிக்க ஓடிய நினைவு
நான் திருமங்கலம் சுடுக்காட்டு வழி ...
பள்ளிப்பை காது கிழிய ஓடிய போது ஞாபகம் ......
நீ வாஷிங்டன் நகரில் வாதாடியபோது ....
... நான் வழுதாவூர் வன்னியரிடம் வாக்குவாதம் ....
மார்டின் லூதர் கிங் கனவு ...
எமக்கு மாட்டு கறிபோல புடித்து போனது ....
...மனு சொன்ன சட்டம் மாட்டு சாணிபோல...
...சேரி மூத்திரத்தில் கரைந்து போனது ....
ஆபிரகாம் லின்கோனின் ஆத்திரம் ....
அமெரிக்க கருப்பர்க்கு கிடைத்த அரசியல் சூத்திரம்...
...அம்பேத்கர் பட்ட கோபம் ....எங்கள் தொப்புள் கொடி...
ஈரமாக உரம்போட்ட உறுதியான தாய்பாசம் .....
மாற்றம் என நீ பேசியபோது ...என் அப்பா அம்பேத்கரின் ...
..போராட்டத்தை புரிந்துகொண்டாய் ...என நினைத்தேன் ....
...நீ காந்தி காந்தி என்ற போது ..
கரியமாணிக்கம் அஞ்சாபுலி சாராயம் குடித்து எடுத்த வாந்தி ..
எனக்கு வாடையாய் ....வந்தது....
...அன்று வேலிகாத்தான் முள் குத்தி ...ஆறாத காயத்தோடு ...
...அமரிக்க கல்லூரியில் நீ சட்டம் படிக்க போனாய் ....
...நானும் அம்பது ருபாய் பணத்தோடு .. டெல்லி வந்தேன் ...
...நீ என் அண்ணன் வீரப்பன் போல இருந்ததால் ...
அஞ்சலை அம்மா உன்னை ஆண்டிப்பாளையம் வரசொன்னா....
...கருவாட்டு கொழம்பில் போட்ட மரவள்ளி கிழங்கு தின்ன ...
....நீ மன்மோகன் சிங்கோடு மட்டன் சாப்பிட்டு ...
ஹுமாயுன் கோபுரத்தில் புறா பார்த்தாய் .....
....பிணம் கொளுத்தி மீந்த சக்கரையில் ...
..ஊறவைத்த அரிசி கொட்டி ...உனக்கு தர ...ஆசை சிவலிங்கம் தோட்டிக்கு ...
...நீ தாஜ் ஹோடேலில் அம்பானி பயலோடு ...
....பப்பெட் தின்று அண்ணி மிஷேல்லோடு ...ஆட்டம் ஆடினாய் ....
உன்னை ...எங்க வீட்டு அம்பேத்கரை பார்க்க அழைத்தோம் ...
..நீ எதிர் வீட்டு காந்தியோடு போய்விட்டாய் ....
...இன்னொருமுறை வா என் அண்ணனாய்
நம் மக்கள் காத்து கிடப்பார்கள் ....ஒரு உண்டை சோறு தர ...
அதில் வரலாற்று கரைசல் கலந்திருக்கும் ....
கறுப்பின மக்களின் காரம் கலந்திருக்கும் ...
..வாயார உண்டு ..பறையாட்டம் ஆடி .....
பெரியமேளம் முனுசாமியின் தாளத்திற்கு ..நீ மைக்கல் ஜாக்சன் நடை போடு ..
....
சாதி வெறி பிடித்த மனிதர்கள் ...எப்படி உன் சூத்து பின் நின்றார்கள் ....
...கருப்பனுக்கு இல்லை ...அமரிக்க அதிபருக்கு .....
...இந்தியாவில் கறுப்பன்கள் ..கம்ப்யூட்டர் தெரிந்த அடிமைகளாய் .......
.....பி திணிக்கும் கிராமங்களில் அழுகிறார்கள் .....
....பாராளு மன்றத்தில் நீ உரை ஆற்றியபோது ...
...முதன்முதலில் எச்ச கையால் காக்கா ஒட்டின ...இந்திய முதலைகள் ....
நாங்கள் கூலி கேட்டு ரெட்டியார் வீட்டு முன் ..செட்டியார் வீட்டுமுன் ...
..கௌண்டன் வீட்டு முன் ...சூரியன் சாயும் வரை சுருண்டு கிடக்கிறோம்...
......நீ பனியா பயல்களோடு ...பலசரக்கு யாபாரம் செய்து ...
...அம்பதாயிரம் வெள்ளை பயல்களுக்கு வேலை கேட்டாய் ...
உன் விமானம் மும்பை வந்த போது ....
..ஒபாமா ..ஒபாமா ...என கத்தினார்கள் ....
...சாதி வெறி பிடித்த இந்தியர்கள்....
நாங்களோ ...அவர் அடித்த அடியில் ..அப்பம்மா ..அப்பம்மா ..
...அயோ ...அயோ.. அப்பா ...அம்மா ....
..என கதறினோம் ......இன்னும் அதுதான் நிலை ......
.......கறுப்புத்துணி ..கொண்டு உன் கண்ணை கட்டி .........
.....எமை காணவிடாது ...... எங்கள் குருதி தோய்ந்த ...
...சிகப்புகம்பலத்தில் உன்னை நடக்கவிட்டர்கள் .......
நீ வெள்ளை மாளிகையில் ...இந்துக்களுடன் ...
...தீபாவளி கொண்டடினாய் .....
...கழுவேற்றி கிழிந்த எங்கள் சூத்தை துடைக்க ....
கந்த துணி ஒன்று தரவில்லை ......அய்யகோ ....
......இருக்கட்டும் ...அசோக சக்கரத்தை கழட்டிவிட்டு ..
...இந்திய தேசிய கொடியில் தீத்திகொல்கிறோம் ....
......அண்ணா ஒபாமா ....
...அஞ்சல களைவெட்டி ..நடவு நட்டு அறுப்பறுத்து ....
....சிவலிங்கம் ...பறையடித்து ...பிணம் கொளுத்தி ...
போடும் சோத்திலும் ......உப்பிருக்கிறது ......
அது போட்ட பிச்சைதான் இந்த ....கவிதைக்கு சொந்தக்காரன் .......
அன்று டெல்லியில் ...நீ திரும்பி போகும்போது .......
.....எல்லோரும் ஒபாமா ...ஒபாமா ...என்று கத்தினார்கள் ....
நான் மட்டும் இந்தியா கேட்ஓரமாய் ...அழுதவாறே ....
..எங்க அப்பா அம்மா ....என்று கத்தினேன் .........
பாசக்காரன் வீரமணி .......
No comments:
Post a Comment