ஒரு கள்ளிப்பாலில் முடியும் கதை
இரண்டைந்து மாதம் நீ சுமந்து
இறக்கி வைத்த துன்பமடி நான் ...
ஒரு துளி கள்ளிப்பாலில் முடித்திருக்கலாம்
என் வாழ்வை நான் முதல் முதலில் சிரித்தபோது ...
அம்மா ...உன்னிடம் நான் பொய்சொல்ல இயலாது ..
இன்று செங்கல் தின்றாலும் செரித்துவிடுகிறது
நீ முந்தானையில் சுருட்டி வைத்து
எனை விரட்டிபிடித்து ஊட்டுவாயே
அந்த கேவரு அடை ..அதில் ஒன்று கிடைக்குமா ?
உன் அக்குளில் ஒளித்து vyarvai நனைந்த
கரும்பு புல்லில் ஒன்று கிடைக்குமா அம்மா ?
அம்மா அன்று முருங்கை கீரை பறித்து
கம்பு மாவில் பிசைந்து வாணலில் varutthu தந்தாயே
அதில் ஒரு குத்து கொடேன் அம்மா ...
உன் கிழிந்த புடவையில் அடிக்கடி
முகம்புதைத்து அழுவேனே
இன்று எப்படியம்மா டெல்லி சாலையில் நான் அழுவது ..
அம்மா ... இது பணம் படைத்தோர் ...
உலா வரும் எமலோகம் ....
ஏழையர்க்கு எல்லாமே இங்கே தூக்குகயிருதான் ..
நான் எப்படியம்மா உன்னிடம் சொல்வேன் ...
ஒவ்வொருநாளும் உன் பாசம் கலந்த உணவை
நான் உண்ட நொடிகள் நினைந்து உருகி அழுவதை ....
இங்கே அம்மா அப்பா இல்லாமல்
ஆயிரம் கோடி மக்கள் எனை அழைக்கிறார்கள்
நான் தாயே உன் முகத்தை அவரிடம் காண்கிறேன் ...
அம்மா அவர்கள் காகிதம் பொறுக்குவது
கழிவறை ஓரம் கிடக்கும் சில பண்டங்கள் தின்பது
நாய்களின் எச்சிலோடு உறங்குவது
உறுப்பு மூட துணி இல்லது மல்லாந்து கிடப்பது
தெரு குப்பை அவர் முகத்தில் அப்புவது ..
மிருகம்போல் சாப்பிட அடித்க்கொல்வது ...
என இன்னும் எவ்வளோவோ ...நான் உன்னிடம் அவர் பற்றி சொல்ல
எனை வாழ்த்துவாய் நீ ..... நான் அவரோடு போனால் ....
அம்மா இந்த உலகம் உன்னை கேட்கும்
டில்லி போன உன்மகன் எண்ண கொண்ட வந்தான் என ?
நீ சொல் அவரிடம் ...
இந்த நாட்டின் உண்மையான முகங்களை
அடையாளம் கண்டுவந்தான் என !
அம்மா இன்னும் ஒன்று ....
இந்த நம் ஏழை சனங்கள் கண்டு ..
ஓடி ஒளியும் பணக்கார பாவிகள் உண்டு ..
உன் முலைப்பால் தந்த கர்வம்
எனக்கும் முன்மண்டையில் அறிவை இழைக்கிறது ...
நான் அடிக்கடி நினைத்க்கொல்வது ...
நீ எங்கே சோறில்லாமல் நான் அழுவேன் என்று
ஒரு துளி கள்ளிப்பால் போட்டு எனை முடிதிருப்பயோ .. அன்று என ...
இன்று ...கள்ளிப்பால் கூட இல்லாத தில்லியில்
காகித சாறு ஊட்டி பேருந்து சத்தத்தில் ...
சாட்டையால் உடலடித்து .. வெப்பக்காற்று தொண்டையில் ..
எத்தனையோ முறை கேட்டதுண்டு நான் இறுதி தாலாட்டு ...
அம்மா கருவிலும் ..... கரத்திலும் ,... தெருவிலும் ...ரோட்டிலும் ...
செதுகிடக்கிறது தில்லி சேரி குழந்தைகள் ....
கல்லறை கூட இல்லையம்மா ...
இன்னஒருமுறை நினைவு கூற .....
என் கண்ணீர் நிக்கவில்லை ...
என் உச்சி மண்டையில் ஒரு சிந்தனை .....
கள்ளிப்பால் கிடைக்கும் ஊருக்கு இவர்களை கடத்தி வர ....
குழந்தைகளுக்கு மட்டும் அல்ல ....
இந்த மனித இனம் அழிய .....
பெரிய கொட்டாரத்தில் கொட்டிவை oru noorayiram லிட்டர் கள்ளிப்பால்
அம்மா .. என் தாயே ....
.உணவன்றி சாவதை விட ...
இவ்வுலம் ஒரு துளி கல்லிபாளில் முடியட்டுமே ....
வீரமணி .............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment