Saturday, April 10, 2010

அறிவியலும் அறிவில்லையும்

அறிவியலும் அறிவில்லையும்

ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்திற்கு
எப்படி தெரியும் நாங்கள் ஏழைகள் என்று ?
அரிக்க மட்டுமே தெரியும் எம் குடலை ........................

ஆண்டைகளின் வீடுமுன்பு
எங்கள் சோத்து வரிசையின் அடையாளம்
இன்னும் அழியாமல் என் எண்ண படுகையில் .........

ஹர்மொனுக்கு எவ்வாறு தெரியும்
நாங்கள் தாழ்ந்த சாதியென்று ....
தூண்டி விடும் எம்மை தூரலில் நனைய ..........

மாடி வீட்டு பெண் சமைந்தபோது...
மாடு மேய்க்கும் எனக்கும் ஆசை உண்டு
அவ்வபோது தாய்மாமன் கனவுகண்டு ..........

முதலில் பார்த்த மனிதனே
சமைந்தவளுக்கே கணவவன் என
என் ஆயா உளறியதை அப்படியே செய்தேன் மனப்பாடம் .............

ஹீமோ க்லோபின் சிகப்பு வண்ணமென
மாடு மேய்க்கும் என் அப்பா சொன்னது
இன்னும் எனக்கு .....உச்சி மண்டையில் அப்பிகிடகிறது ..........

வெள்ளை ரததம் கொண்டு வீணாய் திரியும்
மனிதர்கள் கரப்பான் பூச்சியின் விந்துவில்
பிறந்தவரா ? என எனக்குள் புலம்பல் ...

விழகாலங்களில்
நாங்கள் விழுவோம் கால்களில் .........
ஆண்டைகள் வீடு முன்பு

பறை அடிப்பதும் பாட்டு பாடுவதும்...
பிணம் கொளுத்துவதும் ...பேரின்பம் என் குடிக்கு ...

எனினும் என் காதல் ஆண்டைமகள் மீது
பாபிலோன் தோட்டத்து பசுமைபோல் ...
கிழிந்த திரௌசரில் முட்டும் புல்லாங்குழல் .
..வயதும் எனக்கு பதினெட்டு ........


கட்டி வைத்து அடித்தார்கள் ...கருணை இல்லா மனிதர்கள்
......நிலத்தை தொடு..நீரை தொடு ...
காட்டை தொடு ...கழிவறையை தொடு ...

மகளையா தொட நினைப்பு ...
மானகெட்டேவனே...
எல்லோரும் ஏசினார்கள் ஏசுநாதரை திட்டிய ரோமர்கள் போன்று ...............

எனக்கு ஐந்தாம் வகுப்பு வாத்தியார் சொன்ன அறிவியல் தெரியும் ....
இந்த அறிவிலிகள் சொன்ன ஒன்னும் புரியவில்லை .............

அவளுக்கு ...நிச்சயம் செய்தார்கள் ...
முறை மாமனோடு .....
நான் நுரை கொட்டும் மாடுகளோடு ...
ஏரிக்கரைக்கு போனேன் .....

மீண்டும் ஆண்டை வீடுகளில் யாரேனும் சமைந்தால்
கருப்புத்துணி கட்டிகொல்வதை என் சாதி இளைஞர்க்கு சொன்னேன் ..............

நான் இப்போது காதலிப்பது
மாடுகளை ...மீன்களை ...குயிலை ..கிளியை ..
எறிகரையை ...நீர்நிலைகளை..என் சேரியை ...

ஒரு காலம்.....சாதி ஒழிந்தால்
என் கொள்ளு பேரனாவது ....
ஆண்டை வீட்டு பெண்களுக்கு
தாலி கட்டும் தாய் மாமானவான் ...

என்ற ...ஓர் சிலிர்ப்பு
அடிக்கடி எனை எழுபிவிடுகிறது ..............



வீரமணி

1 comment:

  1. //நிலத்தை தொடு..நீரை தொடு ...
    காட்டை தொடு ...கழிவறையை தொடு ...

    மகளையா தொட நினைப்பு ...
    மானகெட்டேவனே...//

    மிக அற்புதமான வரிகள்...

    www.tamilish.com
    www.tamil10.com
    www.tamilmanam.net

    போன்ற பதிவு திரட்டிகளில் வெளியிடுங்க உங்களது கவிதைகளை. பலருக்கும் தங்கள் கவிதைகளை படிக்க வாய்ப்பு கிடைக்கும்

    ReplyDelete