Saturday, April 10, 2010

தண்ணீர் பொட்டலங்கள்

ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் ஆன ஒரு அதிசயம்
அதன் பெயரோ ....அவரவர் அறிவர் ....

ஏழைக்கும் செல்வர்க்கும் ஒரே சொத்து
தண்ணீர் பொட்டலமும் காற்று மண்டலமும் ...................

பசியின் போது அமிலமாய் .....
அழும்போது கண்ணீராய் ..........
உழைக்கும்போது வ்யர்வையாய் ...
உழலும்போது உதிரமாய் ...

காற்றையும் நீரையும் விலைபேசும் கள்வர் முன்
மழலைபோல் மயங்கி கிடக்கும் நீர் ...

காதலன் தோல் பட்டபோது கரைந்தோடும் நீர் ........
மார்பு தேடலில் .. உடலும் கரமும் ஒன்றாய் நின்று ஒதுகிதரும் நீர் ...

காம்புகள் தேடும் குழந்தைக்கு உதடுநிரைகும் அமுதநீர் ..

புழைகள் தோறும் நீர் பொட்டலங்கள் ....
காற்று குழலோடு கலந்தே கிடக்கிறது ....
வண்ணங்கள் வேறுதான் ...நீர் ஒன்றே !

மாசு நீர் என சில
நல்ல நீர் என சில ....

பிறக்கும்போது பண்ணீற்குடம் ...
வாழும்போது கண்நீற்குடம் ...
சாகும்போது ஒரு சிறு தண்ணீர் குடம் ..

ஒற்றை உடலோடு ஒருவளிடமிருந்து உருவி விழுந்த
தொப்புள் சொந்தங்கள் மனிதர்கள் ...

செயற்கையாய் செய்த பொருள் பொன் நம்பிக்கை
ஒருபோதும் குறைப்பதில்லை ...ஒருவர் கொண்ட நீரை

ஒரு நதியை தன்னுள் வைத்துகொண்ட
மானுடம் இன்னும் ஓடுவது எதற்காக ?


வீரமணி

No comments:

Post a Comment