Thursday, April 22, 2010

ஏசுநாதரின் சாதி

ஏசுநாதரின் சாதி

யூத பெண்ணின் கரு ஈன்ற எங்கள் ராசாவே
அடிமை கோலம் பூண்டு அவதரித்த ரோசாவே ...

ரோமர்களின் சவிக்கை அடி ...
உன் தோல் பதிந்தபோது உருவானது ஒரு கிருத்துவம் ...

கல்லறை சாலையில் நீ கட்டை சுமந்தபோது
பிறந்தது ஒரு சரித்திரம் ....

உன் ரத்தம் ஊறிய பாதையில் ...
உருண்டு அழுதது உன் சாதி சனம் .....

....எங்கள் கதை கேள் .....
சாதி சவுக்கை அடி பட்டு கசங்கி அழும்
புத்தன் தோட்டத்து பூக்கள் நாங்கள்....

ஒவ்வொரு நாளும் சுமக்கிறோம்
தாழ் சாதியென்ற சிலுவையை ....
நீ கல்லறை மேட்டில் இறக்கி வைத்தாய் ..
நாங்கள் செத்தாலும் இறக்கமுடியாத சிலுவை இந்த சாதி சிலுவை ....

நீ எதிரி இல்லாதது வாழசொன்னாய்
நாங்கள் எழ முடியாது சாகிறோம் ....

ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னம் காட்டசொன்னாய் ...
.....ஒரு பெண்பிள்ளையை கற்பழித்து
மறு ஆண் பிள்ளையின் வாயில் மலம் திணிக்கிறார்கள் ....
ஆண்டய்கள் எங்களுக்கு தரும் அப்பம் மலமே !

எங்கள் சாதியில் பலர் உன்னிடம் ஓடிவந்தார்கள் ...
புத்தம் என்று சொல்லி கழுவேற்றி கொன்ற ..கயவர் மதம் துறந்து ...

....ஆம் ,ஆங்கிலேயன் ...இந்தியனை ஆட்டிவைத்த பொழுதில்...
நாங்கள் இருமுனை துப்பக்கிமுன் .....குரங்காட்டம் ஆடினோம் ...

......நாயிறு பாதிரியார் தந்த மிட்டாய்
எங்கள் குழந்ஐகளின் குரலை ஒங்க செய்தது ...

...அவர் தந்த புதிய ஏற்பாடு
...இந்து மதத்தின் பழைய ஏற்பாட்டை பிரித்து மேய்ந்தது ....

நாங்கள் மிட்டாய் தின்னவும் ஆம் என்று சொல்லவும் ....
ஆங்கிலம் பேசவும் தெரிந்த அடிமைகலாணோம் ...

அது பிணம் கொளுத்தும் ... செத்த மாடு தின்னும் வேலையைவிட
சிறப்பென புரிந்தோம் ................

பிரிவினை தாண்டி ஓடி வந்த எங்களை ...உன் கூடாரத்தில் சிலர்
....சேரி கிருத்தவன்...என கூவி அழைத்தார்கள் ....
....தலித்து கிறிஸ்து ...வன்னியன் கிறிஸ்து
நாடார் கிறிஸ்து .....தேவர் கிறிஸ்து ......பிரமான கிறிஸ்து .....
என உன்னை .....மொழி பெயர்த்து சொல்கிறார்களே ......

அப்போ ....நீ இயேசு கிறிஸ்து இல்லையா ........


வீரமணி

1 comment:

  1. Arumaiyaa na kavithai Veera. Ennai porutha varaiyil Buddhism thavirthu veru mathathil inaiyum entha thalithayum thalithaaga karuthakudaathu. Illai endral entha mathathaiyum saaramal irukka vendum. Is it possible to admit our children without mentioning the religion? There should be a seperate column for Atheists in the applicatoin forms.
    Veru mathathil serthu mathathai mattum pinpattrum veshakkara parayargal palarai paarthuvittaen. Namakku Matham certificate-kku mattum irukka vendum. Namathu orae kadamai adimai thalai aruppathu mattum thaan. Jai Bhim
    Subbu, Korea

    ReplyDelete