Thursday, April 29, 2010

மசூதி தெரு

மசூதி தெரு

(தென்னை மரம் நீண்டு தலையாட்டும் ....
பச்சை மாடத்தில் வெள்ளை ஒளி பட்டு என் கண் சிமிட்டும் ...
.....பிறை கோலங்கள் நிறைய கிடக்கும் என் மசூதி தெரு ...மனதை நனைக்கிறது )

பாம்பு கடித்தபோது தூக்கி சென்றார்கள் ....
முதலியார் வீட்டு முன்பு ....அவர் கட்டு போடும் மந்திரகரர்ர்
...மணி அதிகாலை அஞ்சி....
அவர் குறட்டை கலைவதற்குள் ...ஏன் உயிர் கலைந்துடுமோ ...என ...
... என் தாய் கதறல் .....அய்யா அய்யா ....கொஞ்சம் சீக்கிரம் பாருங்க அய்யா ....

.....புள்ள பட்னதுல படிக்குது ....தெரியாத கொள்ளிபக்கம் போய்....எதோ கடிச்சிடிச்சி ...
....நான் சென்றது அவர் கொல்லைவெளி ..என அம்மாவுக்கு ...புரியல ...

....தெ... அஞ்சல இன்னா ஒரே கத்தா கதற .....
.. சும்மா இரு ..முதலியார் மிரட்டல் ....
.அஞ்சலைக்கு தானே தெரியும் புள்ளை வலி ....
.... அன்று சும்மா கேவ்ருதண்டு கீரிடிச்சி ..
.மூணு நாளா...கரிசலாங்கண்ணி தழை அறைச்சி..... தடவணா ....

...இன்னிக்கு பாம்பு கீரிடிச்சி சும்மாவா இருப்பா பறைச்சி .....
....என் அப்பன் நேத்து அடிச்சசாரயதுல ...தென்னன்கீதொட ...முத்தம் ...

...அம்மாவின் குரலில் முதல் சேரியும்....
பின்பு முதலியார் தெருவும் ..எழுந்துகிசி ......
....நான் சொன்னேன் மன்னடிபட்டு ஆஸ்பிடல் ல ...போவலன்னு ...
...அம்மா சொன்னால் முதலியார் ராசிக்காரர் இன்னு ......

ஆனா ......ஒரு சில குழப்பம் அவர்க்கு .....
இந்த பயதான் ....சின்ன முதலியார் பொண்ண ..பள்ளிகொடம் போகும்போது ...பழகனது ....
... என் மரவள்ளி கொள்ளையில் பிடுங்கி தின்ன யோசனை சொன்னது ......
......தண்ணி பாச மறுத்தது ......இன்னும் .. பல சாடல் ...
.... நான் புரிந்து கொண்டேன் .....நமக்கு சங்கு உறுதி என்று .......

.......முதலியாரோ .....தா அஞ்சல ....இன்னிக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது .....
...அம்மா அலறினாள் ...அய்யா .. ஐயோ .....என ....

...ஆமா அஞ்சல ....தேங்க பழம் இல்லாம வந்திருக்க ....
,...அப்புறம் நான் வேற ...ராத்திரி மீன் கொழம்புனால ....
காலைலியே......என் பொன்டடிகிட்ட .......க்கம்...அதான்.....

.....நான் எதிர்வீட்டு புண்ணாக்கு மாமாவிடம் ....யௌ ...
... சீக்கிரம் ஓடி உன் ஓட்ட சைக்கிள் ...எடுத்தா ...

...திருக்கனூர் மசுதிக்கு ஓடுவோம் ........
அம்மா சொன்னால் ... ..டே இருடா ...அப்பிடி சொல்லாத .....
....ஏய் .... எனன சாவ அடிச்சிடுவான்....போ. கம்முனு இரு ,.....
....அவன் பொண்டாட்டி ....வேற ...அவன கூபிடுரா ..........

......சாவுக்கு பயந்தேன் என்றால் ...அமாம் ....
...புண்ணாக்கு மாமா ....தன ரத்தம்..சொட்ட ..உடைந்த பெடலை மிதிக்க ...
....நான் அவர் தோல் மேல் கால் போட்டு விழம் ஏறாமல் ....
...மசுதிக்கு ....ஓட ...வரிசையில் ....இருந்தார்கள் ......மக்கள் .......

.....திருமங்கலம் வழி ஓடியே வந்த என் அம்மா ....
....பாய்...பாய் ....என் புள்ளைய காப்பாத்துங்க .....பாம்பு கடிச்சிடுச்சு .......

.......அவள் குரல் செட்டியார் வீட்டு தெரு முழுதும் ....
.........எதிரொலித்தது .....அவள் அழை சிரபுஞ்ச்யை விட ....அத்திகநேரம் ....கொட்டியது ....
மாறியதா தாயே என் புள்ளைய காப்பது யாரு ......
என மசூதி எதிரே இருந்த சின்ன செங்கல் சாமியிடம் சொன்னால் ....
...நான் சொன்னேன் அம்மா இது முஸ்லிம் கோயில் ....மாரியாத்தா சொல்லாதேன்னு ...
பாய் சாமி கோச்சுக்குவார் .....

......பாய் சொன்னார் ..தம்பி ,,,நீ இங்க வாடா ....என்னை முதலில் இறுக்கி அணைத்தார் ....
....அப்போதே நான் பிழைதுக்கொண்டதாய் ...நினைத்தேன் ....

.....சிறிய நூல் எடுத்து குரான் ஓதி..பாம்பு கடித்த இடத்தை சுற்றி கட்டினார் ....
.......கொஞ்சம் நேரம் இருக்க சொல்லி போக சொன்னார் ......
...என் அம்மா உப்பு ... வேப்பிலை ....வாயில் தினித்தாள்...நான் .....
...கறிபதாகவும்...கசபதாகவும் .....துப்பினேன் ...அபோதுதான் அவள் அழை நின்னது .....

......அந்த பச்சை கலர் புடவையால் என் வாய் துடைத்தாள்...
...நான் அப்போது பதினெட்டை தாண்டிய ...பாசக்காரன் அவளுக்கு ......

...நான் நாளை மெட்ராசுக்கு போறேன் என்றேன் .....
...அவளோ வேகமாய் ஓடி ...பாயிடம் ....கேட்டாள்.....
.....அய்யா சாமி ....புள்ளைய மெட்ராசுக்கு அனுபலாம இன்னு ...
.....அவரோ டெல்லிக்கு கூட அனுப்பு இன்னா பிரச்னை ......
..........

,.......இன்று சப்டர்சங் மடரஸ்ஸ....டில்லி சாலையில் ...எப்போது போனாலும் ......
....வெள்ளிதோறும் முழங்கும் அல்லா ஓதலும் .......
......மெக்காவை...நோக்கி ..யார் தொழிகிரபோதும் ........

எனக்கு .....திருக்கனூர் ....மசூதி தெருவும் ....
...என் அம்மாவின் ...பாசமும்தான் .......என் இமைகளை நனைக்கிறது......

நான் எந்த மதம் என்று தெரியவில்லை ....
...ஆனால் ..இந்து மதம் இல்லை என மட்டும் தெரியும் .
....


பாசக்காரன்
வீரமணி ........

Friday, April 23, 2010

ஹரியனாவில் ஒரு அனல்பறக்கும்

இந்திய தீப கற்பத்தில் சிந்திய சில
எச்சில் சொல்கிறது ...மேல் .சாதியென்று ...

என்ன சாதி என்றால்... பதில் கூற வக்கில்லை ...
....பிரமனின் உடலில் உதிர்த்ததை பெருமையாய்..உளறும்..

தலை தோல் தொடை கால்
...பிறந்த இடம் அவர்க்கு ....

எங்களுக்கு மட்டும் தந்தை சிந்திய விந்தில்
.. தாய் கொடுத்தாள் கரு உடல் உயிர் ...

...காப் பஞ்சாயத்தில் ...மரணதண்டனை பெற்ற
களவானி ஜாட்டுகள்..இன்று ஊனமுற்ற பெண்ணை
உயிரோடு தின்றார்கள் .....

ஏன்.. என தடுத்த அவள் தந்தையின் ...உயிரையும் பறித்தார்கள் ....

........பிரமனின் ஊனம் தெரியுமா ...உனக்கு சாதி வெறிபிடித்த நாயே ?
உண்மையில் பிரம்மன் கடவுள் எனில் ....
......கை கால் ஊனமுற்ற ...காத்து கேளாத ....ஊமையின.....சாதி இந்துக்கள்
..யாருக்கு பிறந்தவர்கள் ? ..பிரம்மன் ஊனமனவனா ....இல்லை உன் ..மண்டையா ?

விந்துக்கு பிறந்த வீரமான இனம் ...நாங்கள் ...
..எச்சிலில் பிறந்த நீ எதிரியாக முடியாது .....

...கண்ணிய குமரி தொட்டு காஸ்மீரம் வரை ...
பரவிக்கிடக்கிறது சேரிகளின் உறவு வரைபடம் ....

நீ சிக்கும் காலம் விரைவில் .....
.....நாங்களும் கணிபொறி கத்துகொண்டோம் ...
உன் சாதி போகும் வழியை சாம்பலாக்க ...

ஒரு பொத்தானை அழுத்தினால் போதும் ..
பொறிபறக்க ஓடும் உன் பொட்டலம் .....சாதி ...

மின் அஞ்சலில் இதோ அனுப்புகிறேன் சேதி ....
..உன் அஞ்சு இரு விரலை அறுத்து போட...

நீ கற்பழிக்க நினைத்தால் ..குஞ்சும் கொட்டையும்...
...அம்மியில் வைத்து அரைக்கப்படும் .....

களவாட நினைத்தால் ....உன் பாதம் போகும் வழயில் ...
,,பயம்க்காட்டும்...தோட்டி சிவலிங்கம் ..தடியடி ...

...செரிபென்களின் சாண்டைகளில் ..உன் உதடு வைத்து ..உறிஞ்கி குடிக்கையில் ......
கிழிந்த உன் கோவணத்தில் தெரிதொடும் ..கஞ்சியை ..ஊர்ச்சாலையில் தெளிக்கையில் ...
...எங்கே போனது சாதி ....

...இப்போ மாட்டுக்கறி விலை கூட உன்னால் தானே ....
. ஏறிவிட்டது .....

இன்னும் சில நொடிகளில் உன் இதயம் நின்றுவிடும் ....
...எங்கள் பறை இசை முழக்கத்தில் ......
....உன் பிணம் போகும் சாலையில் ,,முளைத்திருக்கும் போதி மரம் .....
.....உன் ஆவிகள் பறக்காமல் ..என் தோட்டி அப்பனின் மூத்திரம் ....
..உன் இந்து சுடுகாடு குழியில் ..அன்று உன் (.....வின் குழியில் நிறைந்த ....போல் அடைத்து நிற்கும் ....

..................மறு பிறவி இருந்தால் பிறந்து பார் சேரியில் ....
..நல்ல சேதி வரும் ....மானுடத்தில் சிறந்தவர்கள் ..சேரி மக்கள் என்று .......

.......இன்னும் ஒருமுறை நீ எரிக்க நினைத்தால் ....
............................
அனல் பறக்கும் ஹரியனாவில் ....
.......உன் பிணம் எரியும் சுடுகாட்டில் .....


பாசக்காரன் வீரமணி ஹரியனாவில் ஒரு அனல்பறக்கும்

இந்திய தீப கற்பத்தில் சிந்திய சில
எச்சில் சொல்கிறது ...மேல் .சாதியென்று ...

என்ன சாதி என்றால்... பதில் கூற வக்கில்லை ...
....பிரமனின் உடலில் உதிர்த்ததை பெருமையாய்..உளறும்..

தலை தோல் தொடை கால்
...பிறந்த இடம் அவர்க்கு ....

எங்களுக்கு மட்டும் தந்தை சிந்திய விந்தில்
.. தாய் கொடுத்தாள் கரு உடல் உயிர் ...

...காப் பஞ்சாயத்தில் ...மரணதண்டனை பெற்ற
களவானி ஜாட்டுகள்..இன்று ஊனமுற்ற பெண்ணை
உயிரோடு தின்றார்கள் .....

ஏன்.. என தடுத்த அவள் தந்தையின் ...உயிரையும் பறித்தார்கள் ....

........பிரமனின் ஊனம் தெரியுமா ...உனக்கு சாதி வெறிபிடித்த நாயே ?
உண்மையில் பிரம்மன் கடவுள் எனில் ....
......கை கால் ஊனமுற்ற ...காத்து கேளாத ....ஊமையின.....சாதி இந்துக்கள்
..யாருக்கு பிறந்தவர்கள் ? ..பிரம்மன் ஊனமனவனா ....இல்லை உன் ..மண்டையா ?

விந்துக்கு பிறந்த வீரமான இனம் ...நாங்கள் ...
..எச்சிலில் பிறந்த நீ எதிரியாக முடியாது .....

...கண்ணிய குமரி தொட்டு காஸ்மீரம் வரை ...
பரவிக்கிடக்கிறது சேரிகளின் உறவு வரைபடம் ....

நீ சிக்கும் காலம் விரைவில் .....
.....நாங்களும் கணிபொறி கத்துகொண்டோம் ...
உன் சாதி போகும் வழியை சாம்பலாக்க ...

ஒரு பொத்தானை அழுத்தினால் போதும் ..
பொறிபறக்க ஓடும் உன் பொட்டலம் .....சாதி ...

மின் அஞ்சலில் இதோ அனுப்புகிறேன் சேதி ....
..உன் அஞ்சு இரு விரலை அறுத்து போட...

நீ கற்பழிக்க நினைத்தால் ..குஞ்சும் கொட்டையும்...
...அம்மியில் வைத்து அரைக்கப்படும் .....

களவாட நினைத்தால் ....உன் பாதம் போகும் வழயில் ...
,,பயம்க்காட்டும்...தோட்டி சிவலிங்கம் ..தடியடி ...

...செரிபென்களின் சாண்டைகளில் ..உன் உதடு வைத்து ..உறிஞ்கி குடிக்கையில் ......
கிழிந்த உன் கோவணத்தில் தெரிதொடும் ..கஞ்சியை ..ஊர்ச்சாலையில் தெளிக்கையில் ...
...எங்கே போனது சாதி ....

...இப்போ மாட்டுக்கறி விலை கூட உன்னால் தானே ....
. ஏறிவிட்டது .....

இன்னும் சில நொடிகளில் உன் இதயம் நின்றுவிடும் ....
...எங்கள் பறை இசை முழக்கத்தில் ......
....உன் பிணம் போகும் சாலையில் ,,முளைத்திருக்கும் போதி மரம் .....
.....உன் ஆவிகள் பறக்காமல் ..என் தோட்டி அப்பனின் மூத்திரம் ....
..உன் இந்து சுடுகாடு குழியில் ..அன்று உன் (.....வின் குழியில் நிறைந்த ....போல் அடைத்து நிற்கும் ....

..................மறு பிறவி இருந்தால் பிறந்து பார் சேரியில் ....
..நல்ல சேதி வரும் ....மானுடத்தில் சிறந்தவர்கள் ..சேரி மக்கள் என்று .......

.......இன்னும் ஒருமுறை நீ எரிக்க நினைத்தால் ....
............................
அனல் பறக்கும் ஹரியனாவில் ....
.......உன் பிணம் எரியும் சுடுகாட்டில் .....


பாசக்காரன் வீரமணி

Thursday, April 22, 2010

ஏசுநாதரின் சாதி

ஏசுநாதரின் சாதி

யூத பெண்ணின் கரு ஈன்ற எங்கள் ராசாவே
அடிமை கோலம் பூண்டு அவதரித்த ரோசாவே ...

ரோமர்களின் சவிக்கை அடி ...
உன் தோல் பதிந்தபோது உருவானது ஒரு கிருத்துவம் ...

கல்லறை சாலையில் நீ கட்டை சுமந்தபோது
பிறந்தது ஒரு சரித்திரம் ....

உன் ரத்தம் ஊறிய பாதையில் ...
உருண்டு அழுதது உன் சாதி சனம் .....

....எங்கள் கதை கேள் .....
சாதி சவுக்கை அடி பட்டு கசங்கி அழும்
புத்தன் தோட்டத்து பூக்கள் நாங்கள்....

ஒவ்வொரு நாளும் சுமக்கிறோம்
தாழ் சாதியென்ற சிலுவையை ....
நீ கல்லறை மேட்டில் இறக்கி வைத்தாய் ..
நாங்கள் செத்தாலும் இறக்கமுடியாத சிலுவை இந்த சாதி சிலுவை ....

நீ எதிரி இல்லாதது வாழசொன்னாய்
நாங்கள் எழ முடியாது சாகிறோம் ....

ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னம் காட்டசொன்னாய் ...
.....ஒரு பெண்பிள்ளையை கற்பழித்து
மறு ஆண் பிள்ளையின் வாயில் மலம் திணிக்கிறார்கள் ....
ஆண்டய்கள் எங்களுக்கு தரும் அப்பம் மலமே !

எங்கள் சாதியில் பலர் உன்னிடம் ஓடிவந்தார்கள் ...
புத்தம் என்று சொல்லி கழுவேற்றி கொன்ற ..கயவர் மதம் துறந்து ...

....ஆம் ,ஆங்கிலேயன் ...இந்தியனை ஆட்டிவைத்த பொழுதில்...
நாங்கள் இருமுனை துப்பக்கிமுன் .....குரங்காட்டம் ஆடினோம் ...

......நாயிறு பாதிரியார் தந்த மிட்டாய்
எங்கள் குழந்ஐகளின் குரலை ஒங்க செய்தது ...

...அவர் தந்த புதிய ஏற்பாடு
...இந்து மதத்தின் பழைய ஏற்பாட்டை பிரித்து மேய்ந்தது ....

நாங்கள் மிட்டாய் தின்னவும் ஆம் என்று சொல்லவும் ....
ஆங்கிலம் பேசவும் தெரிந்த அடிமைகலாணோம் ...

அது பிணம் கொளுத்தும் ... செத்த மாடு தின்னும் வேலையைவிட
சிறப்பென புரிந்தோம் ................

பிரிவினை தாண்டி ஓடி வந்த எங்களை ...உன் கூடாரத்தில் சிலர்
....சேரி கிருத்தவன்...என கூவி அழைத்தார்கள் ....
....தலித்து கிறிஸ்து ...வன்னியன் கிறிஸ்து
நாடார் கிறிஸ்து .....தேவர் கிறிஸ்து ......பிரமான கிறிஸ்து .....
என உன்னை .....மொழி பெயர்த்து சொல்கிறார்களே ......

அப்போ ....நீ இயேசு கிறிஸ்து இல்லையா ........


வீரமணி

Friday, April 16, 2010

ஒரு கள்ளிப்பாலில் முடியும் கதை

ஒரு கள்ளிப்பாலில் முடியும் கதை

இரண்டைந்து மாதம் நீ சுமந்து
இறக்கி வைத்த துன்பமடி நான் ...

ஒரு துளி கள்ளிப்பாலில் முடித்திருக்கலாம்
என் வாழ்வை நான் முதல் முதலில் சிரித்தபோது ...

அம்மா ...உன்னிடம் நான் பொய்சொல்ல இயலாது ..
இன்று செங்கல் தின்றாலும் செரித்துவிடுகிறது

நீ முந்தானையில் சுருட்டி வைத்து
எனை விரட்டிபிடித்து ஊட்டுவாயே
அந்த கேவரு அடை ..அதில் ஒன்று கிடைக்குமா ?

உன் அக்குளில் ஒளித்து vyarvai நனைந்த
கரும்பு புல்லில் ஒன்று கிடைக்குமா அம்மா ?

அம்மா அன்று முருங்கை கீரை பறித்து
கம்பு மாவில் பிசைந்து வாணலில் varutthu தந்தாயே
அதில் ஒரு குத்து கொடேன் அம்மா ...

உன் கிழிந்த புடவையில் அடிக்கடி
முகம்புதைத்து அழுவேனே
இன்று எப்படியம்மா டெல்லி சாலையில் நான் அழுவது ..

அம்மா ... இது பணம் படைத்தோர் ...
உலா வரும் எமலோகம் ....
ஏழையர்க்கு எல்லாமே இங்கே தூக்குகயிருதான் ..

நான் எப்படியம்மா உன்னிடம் சொல்வேன் ...
ஒவ்வொருநாளும் உன் பாசம் கலந்த உணவை
நான் உண்ட நொடிகள் நினைந்து உருகி அழுவதை ....

இங்கே அம்மா அப்பா இல்லாமல்
ஆயிரம் கோடி மக்கள் எனை அழைக்கிறார்கள்
நான் தாயே உன் முகத்தை அவரிடம் காண்கிறேன் ...

அம்மா அவர்கள் காகிதம் பொறுக்குவது
கழிவறை ஓரம் கிடக்கும் சில பண்டங்கள் தின்பது
நாய்களின் எச்சிலோடு உறங்குவது
உறுப்பு மூட துணி இல்லது மல்லாந்து கிடப்பது
தெரு குப்பை அவர் முகத்தில் அப்புவது ..
மிருகம்போல் சாப்பிட அடித்க்கொல்வது ...
என இன்னும் எவ்வளோவோ ...நான் உன்னிடம் அவர் பற்றி சொல்ல

எனை வாழ்த்துவாய் நீ ..... நான் அவரோடு போனால் ....

அம்மா இந்த உலகம் உன்னை கேட்கும்
டில்லி போன உன்மகன் எண்ண கொண்ட வந்தான் என ?

நீ சொல் அவரிடம் ...
இந்த நாட்டின் உண்மையான முகங்களை
அடையாளம் கண்டுவந்தான் என !

அம்மா இன்னும் ஒன்று ....
இந்த நம் ஏழை சனங்கள் கண்டு ..
ஓடி ஒளியும் பணக்கார பாவிகள் உண்டு ..

உன் முலைப்பால் தந்த கர்வம்
எனக்கும் முன்மண்டையில் அறிவை இழைக்கிறது ...

நான் அடிக்கடி நினைத்க்கொல்வது ...
நீ எங்கே சோறில்லாமல் நான் அழுவேன் என்று
ஒரு துளி கள்ளிப்பால் போட்டு எனை முடிதிருப்பயோ .. அன்று என ...

இன்று ...கள்ளிப்பால் கூட இல்லாத தில்லியில்
காகித சாறு ஊட்டி பேருந்து சத்தத்தில் ...
சாட்டையால் உடலடித்து .. வெப்பக்காற்று தொண்டையில் ..
எத்தனையோ முறை கேட்டதுண்டு நான் இறுதி தாலாட்டு ...

அம்மா கருவிலும் ..... கரத்திலும் ,... தெருவிலும் ...ரோட்டிலும் ...
செதுகிடக்கிறது தில்லி சேரி குழந்தைகள் ....

கல்லறை கூட இல்லையம்மா ...
இன்னஒருமுறை நினைவு கூற .....

என் கண்ணீர் நிக்கவில்லை ...
என் உச்சி மண்டையில் ஒரு சிந்தனை .....
கள்ளிப்பால் கிடைக்கும் ஊருக்கு இவர்களை கடத்தி வர ....

குழந்தைகளுக்கு மட்டும் அல்ல ....
இந்த மனித இனம் அழிய .....
பெரிய கொட்டாரத்தில் கொட்டிவை oru noorayiram லிட்டர் கள்ளிப்பால்

அம்மா .. என் தாயே ....
.உணவன்றி சாவதை விட ...
இவ்வுலம் ஒரு துளி கல்லிபாளில் முடியட்டுமே ....



வீரமணி .............


Saturday, April 10, 2010

அறிவியலும் அறிவில்லையும்

அறிவியலும் அறிவில்லையும்

ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்திற்கு
எப்படி தெரியும் நாங்கள் ஏழைகள் என்று ?
அரிக்க மட்டுமே தெரியும் எம் குடலை ........................

ஆண்டைகளின் வீடுமுன்பு
எங்கள் சோத்து வரிசையின் அடையாளம்
இன்னும் அழியாமல் என் எண்ண படுகையில் .........

ஹர்மொனுக்கு எவ்வாறு தெரியும்
நாங்கள் தாழ்ந்த சாதியென்று ....
தூண்டி விடும் எம்மை தூரலில் நனைய ..........

மாடி வீட்டு பெண் சமைந்தபோது...
மாடு மேய்க்கும் எனக்கும் ஆசை உண்டு
அவ்வபோது தாய்மாமன் கனவுகண்டு ..........

முதலில் பார்த்த மனிதனே
சமைந்தவளுக்கே கணவவன் என
என் ஆயா உளறியதை அப்படியே செய்தேன் மனப்பாடம் .............

ஹீமோ க்லோபின் சிகப்பு வண்ணமென
மாடு மேய்க்கும் என் அப்பா சொன்னது
இன்னும் எனக்கு .....உச்சி மண்டையில் அப்பிகிடகிறது ..........

வெள்ளை ரததம் கொண்டு வீணாய் திரியும்
மனிதர்கள் கரப்பான் பூச்சியின் விந்துவில்
பிறந்தவரா ? என எனக்குள் புலம்பல் ...

விழகாலங்களில்
நாங்கள் விழுவோம் கால்களில் .........
ஆண்டைகள் வீடு முன்பு

பறை அடிப்பதும் பாட்டு பாடுவதும்...
பிணம் கொளுத்துவதும் ...பேரின்பம் என் குடிக்கு ...

எனினும் என் காதல் ஆண்டைமகள் மீது
பாபிலோன் தோட்டத்து பசுமைபோல் ...
கிழிந்த திரௌசரில் முட்டும் புல்லாங்குழல் .
..வயதும் எனக்கு பதினெட்டு ........


கட்டி வைத்து அடித்தார்கள் ...கருணை இல்லா மனிதர்கள்
......நிலத்தை தொடு..நீரை தொடு ...
காட்டை தொடு ...கழிவறையை தொடு ...

மகளையா தொட நினைப்பு ...
மானகெட்டேவனே...
எல்லோரும் ஏசினார்கள் ஏசுநாதரை திட்டிய ரோமர்கள் போன்று ...............

எனக்கு ஐந்தாம் வகுப்பு வாத்தியார் சொன்ன அறிவியல் தெரியும் ....
இந்த அறிவிலிகள் சொன்ன ஒன்னும் புரியவில்லை .............

அவளுக்கு ...நிச்சயம் செய்தார்கள் ...
முறை மாமனோடு .....
நான் நுரை கொட்டும் மாடுகளோடு ...
ஏரிக்கரைக்கு போனேன் .....

மீண்டும் ஆண்டை வீடுகளில் யாரேனும் சமைந்தால்
கருப்புத்துணி கட்டிகொல்வதை என் சாதி இளைஞர்க்கு சொன்னேன் ..............

நான் இப்போது காதலிப்பது
மாடுகளை ...மீன்களை ...குயிலை ..கிளியை ..
எறிகரையை ...நீர்நிலைகளை..என் சேரியை ...

ஒரு காலம்.....சாதி ஒழிந்தால்
என் கொள்ளு பேரனாவது ....
ஆண்டை வீட்டு பெண்களுக்கு
தாலி கட்டும் தாய் மாமானவான் ...

என்ற ...ஓர் சிலிர்ப்பு
அடிக்கடி எனை எழுபிவிடுகிறது ..............



வீரமணி

தண்ணீர் பொட்டலங்கள்

ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் ஆன ஒரு அதிசயம்
அதன் பெயரோ ....அவரவர் அறிவர் ....

ஏழைக்கும் செல்வர்க்கும் ஒரே சொத்து
தண்ணீர் பொட்டலமும் காற்று மண்டலமும் ...................

பசியின் போது அமிலமாய் .....
அழும்போது கண்ணீராய் ..........
உழைக்கும்போது வ்யர்வையாய் ...
உழலும்போது உதிரமாய் ...

காற்றையும் நீரையும் விலைபேசும் கள்வர் முன்
மழலைபோல் மயங்கி கிடக்கும் நீர் ...

காதலன் தோல் பட்டபோது கரைந்தோடும் நீர் ........
மார்பு தேடலில் .. உடலும் கரமும் ஒன்றாய் நின்று ஒதுகிதரும் நீர் ...

காம்புகள் தேடும் குழந்தைக்கு உதடுநிரைகும் அமுதநீர் ..

புழைகள் தோறும் நீர் பொட்டலங்கள் ....
காற்று குழலோடு கலந்தே கிடக்கிறது ....
வண்ணங்கள் வேறுதான் ...நீர் ஒன்றே !

மாசு நீர் என சில
நல்ல நீர் என சில ....

பிறக்கும்போது பண்ணீற்குடம் ...
வாழும்போது கண்நீற்குடம் ...
சாகும்போது ஒரு சிறு தண்ணீர் குடம் ..

ஒற்றை உடலோடு ஒருவளிடமிருந்து உருவி விழுந்த
தொப்புள் சொந்தங்கள் மனிதர்கள் ...

செயற்கையாய் செய்த பொருள் பொன் நம்பிக்கை
ஒருபோதும் குறைப்பதில்லை ...ஒருவர் கொண்ட நீரை

ஒரு நதியை தன்னுள் வைத்துகொண்ட
மானுடம் இன்னும் ஓடுவது எதற்காக ?


வீரமணி

அனல் கக்கும் இவள் ஒரு அதிசயம்

மான் என்றா ...மயில் என்றா
புறா என்றா ....நீயே சொல் ...உன் பெயரை ...

எப்படி ஒரே உருவம் பூண்ட உன்னால்
சுலபமாய் அடிமையகமுடிகிறது....

தாலி என்றும் ...வேளிஎன்றும் உன்னை கசக்கிய கூடத்தில் ...

சீ சீ .... நீ அனல் கக்கும் ஆயுதப்பரவை
நீ கான்தகங்களால் கூட கவரமுடியாத இரும்பூ

ஆனால் குடும்பம் என்ற சிறைக்குள் மாட்டிகொண்டு
குங்குமம் வைத்துக்கொண்டால் .....

ஒரு ஆடவனின் அக்குள் இடுக்கில் மாட்டிக்கொண்டால் ..
ஒரு குருட்டு சாதிவழியில் கோபமாய் சிக்கிக்கொண்டால் ....

உன் பெயர் மாரிவிடுமடி பேரறிவளே!

எனை மன்னித்துவிடு ...
பெண்புலிகளை நான் இதுவரை பார்த்ததில்லை ..
உன் வருகையில் அது நடக்கும் .......

நீ எங்கே வந்துவிடுவாயோ என அரண்டு மிரண்டு கிடக்கும் ஆணாதிக்கம்

நீ உனக்காக ஒருநாள் kuyilaai மாறி கூவிடு ...

அது ஆணாதிக்க பிணம் போகும் சாலையில் ...
ஒரு இன்னிசையாய் ஒலிக்கிறது ....

பாசக்காரன் வீரமணி