Sunday, November 6, 2011

Sunday, August 14, 2011

பிணம் தின்னி தேசியவாதம்

பிணம் தின்னி தேசியவாதம்

ஆதி திராவிடனின் கால் பதித்து போட்ட ...
பூமியில் அவன் கொன்று ..
..பூர்வீகத்தை ஆண்டைக்காய் கொலையிடும்
பொல்லாத தேசியவாதம் ....

..தொல்காப்பியன் சொன்னதை ..
..தொலைத்து விட்டு அழும் பறையன் பாணன் முகம் ....!

..நிலம் என்றால் என்ன ?
..முதலி.. கவுண்டன்.. செட்டி ..ரெட்டி ..
...போன்றோரின் கைக்குட்டை காதல் கடிதம் .....

...தொடர்ந்த தோல்வியில் துயிலும் தொண்மை..
..அவைகளை கழுவில் ஏற்றும் கள்வனும் ஒருவன் ?
..நாடகத்தின் பெயர் தேசியவாதம் !

பல் இடுக்கில் தொங்கும் பகட்டு மொழிக்காய்..
..எங்களை பலியிட ஒருவன் ...
சூத்திர பதர்களின் பிடியில் 'ஒரு மாத்திரை' மனிதன் ...

மீந்த சோத்துக்கு நாய்கள் மத்தியில் ...
..போர் இடும் மனிதன் ..சாதி உலகில் ....
...அதை காத்திட இல்லை ..கை மடித்து பேசும் ...
..கருங்காலிகள் கூட்டம் ...

..திருட்டு சான்றிதழில் படித்தவனை...
..இடி தாங்கி என்னும் ..மொழி போதை மனிதன் ...
...காடு வெட்டி கரும்பயல் ஒருவன் ..
..பறையனின் ஆளை வெட்ட ஆணை இடுவான் ...
.....அவனை குடி தாங்கி என்பானாம்...மொழி மயிர் பிடுங்கி !

..களபறையன் ..மல்லன் ...மதுரை வீரனின் ..
பிள்ளையர் பேசும் பாசம் எட்டாத .....உனக்கு ...
.வன்னியன் ..இசை வேளாளன் ...
சொல்லும் வாக்குகள் ...சாரயம் ஊறிய நா போல் .. சீ! சீ ...

...சேரிகளே ..எழுந்திருங்கள் ....
..தூங்கியது போதும் மொழி போதையில் ....

..நிலம் கேட்டு மாநாடு போடுங்கள்
..நித்தரை களையும் ஆண்டைகளுக்கு ...
... பெண் பார்க்க செல்லுங்கள் ஊர்த்தெருவில் ....
..பெயர்ந்து ஓடும் மொழிப்பாசம் ....

...வலங்கை இடங்கை எல்லாம் ...
...புடுங்காமல் அதிரும் வேரருப்பில் ...
கை மாறி போகும் ..வாய் ...சூத்து ....
...
....தேசியம் போட்ட வேலி உள் ....
..திமிரில் உலவும் சாதி மதம் ....
..அவை உடைக்க ஆயுதம் ..சேரிகளில் கிடக்கும் ...
..தோண்டி எடுக்க ...ஆணை இடுங்கள் அவர் அவர் தெருவில் ...

..செங்கையோ ...குமரியோ ...திருச்சியோ ...
...சென்னையோ காஞ்சியோ கோவையோ ....
...மாநாடு அழைப்பர் ஆண்டைகள் ...
...அவர் மச்சி வீட்டு பணம் கரையாது காத்திட !

...சில கருப்பு ஆடுகள் ...பொறுப்பாய் ...
..உங்கள் கரம் பிடித்து அழைப்பர் ...
...தேசியம் என்ற விழத்தை நீங்களே பருகிட ...

..கேள்வி கேளுங்கள் ..
.அய்யா ...ஒரு மொழி என்பீர் ...ஒரு நாடு என்பீர்
...தேசிய வாதம் என்பீர் .
.இனம் என்பீர் ..என்னவன் என்பீர் ...
...ஆனால் ...இதுவரை ..
.பொருளால் ..உணர்வால் ...உறவால் ..
..நிலத்தால் ..நீரால் ..பூமியால் ...
..பிரிந்து கிடக்கிறோமே !

...நாங்கள் போராட்டம் நடத்தினால் ...
..உம் வீட்டில் பொருள் குவியும் அதிசயம் !
..தொண்டை வறண்டு துடித்து யாம் விழின் ...
...உங்கள் கதவு மூடிக்கொள்ளும் ...ஆஹா
......இது என்ன பிணம் தின்னி தேசியவாதமா ?

..நெற்றி பொட்டில் கட்டிகொல்வோம் ...கொடி
..நெடுந்தூரம் நடப்போம் ஓடி ...
...ஆர்ப்பரிப்போம் ...அவா கொள்வோம் ...
...அண்ணன் என்போம் ...தம்பி என்போம் ...
....கூட்டம் முடிந்ததும் ...
...கூரைகள் கீழ் கரைவோம் ...பூச்சிகளாய்...

...நாங்கள் சிங்கம் என யாரேனும் சொன்னால் ...
..சினம் கொள்வார் தேசிய தமிழ் ஆண்டைகள் ...

...நீல நூல் படித்து அண்ணல் அம்பேத்கர் ..
..எமை சிங்கம் என்றார் ...
..என ஆசைகொள்வோம் வாழ்ந்திட ...
......ச்சே ச்சே அவர் மராத்தி காரர் ...
..என்பர் ஆந்திர நாயிடுகளும் ...
..கன்னட முதலியார்களும் .......

.....தமிழ் நிலத்தில் ...முத்துவேல் மகனுக்கு ..
...மார்வாடி மருமவன்கள்....
...மைசூர் ராணிக்கு ...குற்ற பரம்பரை ..தொப்புள் சொந்தம் ...
...செத்து போன் இராமச்சந்திரன் ..
.சேரியில் ஓட்டை பொறுக்கும் செந்தமிழ் நாடு ....

..மனை விற்பனை என்ற பெயரில் ...
..சேரி மண்ணை விற்கிறான் தமிழன் ...
..இனம் என்ற பெயரில் .
.சேரி பெண்களின் சீலை மட்டும் குருதி புணரும் ...

...தம்பி என்பான் தமிழில் ...தம்ளர் மட்டு தனி !
..அண்ணன் என்பான் சேரி ஏஜெண்டுகளை ...
...அட அவன் ஒரு ஆளா ? என்பான் அடுத்த நொடி !

...இரு முலைகளை வெட்டியபோதும் ...
..இலைகளுக்கே ..ஓட்டு ....
..அடி மடியில் கை வைத்தும் ...
'கை' தான் ஆளும் ..நாட்டை
....போதை மருந்து வியாபாரம் !

..சிங்களவன் கொள்கிறான் ..என சொல்லி ...
...சேரிகளை கொள்ளுகிறான் ..தமிழன் ...
..தேசிய பாது காப்பு சட்டத்தில் ...சிதம்பரம்
...சூத்திரனின் பெயர் இல்லா பட்டியல் ...
..காவல் நிலையம் ...வன்னியனுக்கும் .
.வாண்டயானுக்கும் ...காதல் நிலையம் !!

..கடலூர் மாவட்டத்தில் ..கதறி அழும் பறைச்சி ...
.....தமிழுக்கு கிடைத்த சேரி இறைச்சி !
.....துப்பாக்கிகள் கூட சாதி பார்த்த தேசியவாதம் ...
...மலையகத்தில் மாண்டு விழும் அனாதை ஆதிகள் ....
...தொடை நடுங்கி பயல்கள் ..
...பேசும் வெளிநாட்டு இன உணர்வு !

....பல்லாயிரம் ஆண்டுகள் சுமந்தோம் ...
..மதம் எனும் பல்லக்கு ...
..பல நூறு ஆண்டுகள் தோள் கொடுத்தோம் ..
...மொழி ..இன போதைக்கு ...
...பல நூறு நாட்கள் சிறையில் கிடந்தோம் ...
..சூத்திரர் பொருள் சேர்த்திட ....
...பல பொழுதில் போராடி மட்டுமே
. இறந்திடும் வாழ்க்கை எம் உலகில் ,.....

...நாங்கள் நூறாய் எழுபதுகளில் ...
...ஆயிரமாய் தொண்ணுறுகளில் ..
..லட்சமாய் இரண்டாயிரத்தில் ...
...கோடியாய் ...இன்று ..கொலை சிந்து பாடுகிறோம்
..மொழி ..இனம் .....என் குலம் அழித்த காரணி ....
......இதை இன்னும் அறியாத சேரியே ! நீ யார் அணி ?

....பார்ப்பனர் எதிர்ப்பு என்றன் ...
பகல் பொழுதிலே அலகு குத்தும் சூத்திர இந்து ...
...இந்து மதம் ஒழிப்பே விடுதலை என்றான் ...
...கோவில்களில் நிற்க இடமில்லை சாமிக்கே !

..ஆடி பூசம் ...பங்குனி உத்திரம் ..
..கார்த்திகை தீபம் ...சனிபெயர்ச்சி ...
...குறு திசை ..குலம் ..கோத்திர ராசி ...
...பல் விளக்காமல் பார்க்கும் ..பராசக்தி தொலைகாட்சி ..
.....பண்பாடு என்ற பெயரில் தமிழ் வாயில்... இந்து பிய் ....
......
...என பார்ப்பனர் ஓடிவிட்ட ...
..சூத்திர தேசத்தில் ...நாத்திகன்கள் ஆடும் ..
..இந்து -தமிழ் -இன - மொழி -சுவருக்குள் ...
..அரங்கேறும் தேசிய தேனிலவு ....
....அதில் ஊசிபோனே ஒரு சொல் மந்திரம் ...திராவிட நாடு !

..ஆதி திராவிடன் ..யாம் என்றால் ...
...அப்படிஎன்றால் ? ..என கட்டபொம்மன் போல் கேட்கும் ...
...களவானி தேசியவாதிகள் !

......களை பறித்தாயா? நடவு நட்டாயா...
..கற்பழித்தபின் ..சேரி பெண்டிற்கு தாலி கட்டினையா?
..மாமனா ? மச்சானா ?..மானம் கெட்டவனே ?
..பிய் திணித்த வழக்கில் சிறை சென்றாயா?
...கழுத்தறுத்த வழக்கில் கம்பி எண்ணினாயா ?
..ஏன் கேட்கிறாய் சேரியில் ஓட்டு !
..எதற்கு அழைக்கிறாய் ..தேசிய மாநாட்டுக்கு ?
......
.......வெள்ளையனே வெளியேறு என்றான் ....
...நிலத்தை அவன் பிடித்து ...
..நாட்டை சூறையாடியதால் ....

..வெள்ளாலனே வெளியேறு என்றால் ...
...மறு நாள் ..பொது மருத்துவ மனையில் .
....சேரி சடலம் ....அயயஹோ ....
....சேரிக்கு வெள்ளையன் வெள்ளாலனே...
...அவனை செருக்கு கொண்டு அடிப்போம் நிலம் மீட்க !

...எங்கள் சுடுகாட்டில் ...
..தனித்தே போகும் சனியில் செத்த பிணம் கூட !
...சறுக்கு விளையாட்டு ...சட்டமன்றத்தில் ..
..தலித்துகள் விஷயம் சொல்லும் பொழுது ...

....முதுகெலும்பை கொணர்ந்து காக்கும் ...
..சேரி இப்ப்பூமியை ...
...மூச்சின்றி உழைக்கும் கறுப்பன்கள் நிலத்தில் ...
...முறம் வீசி இசை போடும் பறைச்சியவள் தாலாட்டு ...
...முனகி முயன்று நடக்க தொடங்கும் நாகரிகம் ...
...நாங்கள் இல்லாது போனால் இல்லை இப்பூமி ...

....பின் என்ன ?
பிணம் தின்ன ...பெயர் பட்டியல் போடும் ..
...திமிர் தேசியவாதம் ...
..அதற்கு விளக்கு ஏந்தும் ...
..வெளுத்து போன கருத்த சில கரும்புள்ளிகள் ...
...
.....தூசு தட்டி எடுத்த வரலாறு ..
...இன்று எரியும் தழலில் விழும் கனம் ...
...வேடிக்கை பார்க்க ..நாங்கள் ...
...மொழி வெறியர்கள் அல்ல ?
...புது வழி படைக்கும் ..புத்தன் தந்த பொறிகள் !!!!
...எரிந்து கொண்டே இருக்கும் .
.எமை எரிக்க நினைக்கும் ...
...பொய் மனிதர் புரிந்து புத்தம் புகும் வரை.....

.....இன்று மொழிபோரில் இறந்த சேரி ....
....இன்று இனபோரில் மடிந்த மக்கள் ...
...நாளை எழுந்து கொள்வார் ...
..அரக மரத்தின் அடியில் பிக்குகளாய்.....

....புன்னகை புடுங்கி தின்ற பொல்லாத ..இந்து மதம் ...
...தன் பொச்சி கழுவ நீரின்றி கங்கை ஓடும் ....
....தமிழில் கலந்த இந்து விழத்தை ...
...கண்டு பிரிக்கும் கருத்தை ..
...சமணர் தீட்டிய கோடுகள் சொல்லும் ....

....தமிழில் கலந்த சேரி குடியை ...
...பாலி-பிரிக்கும் என்னபரவையாய் ...தம்மம் இருக்கும் ...

......வழிபாடு ....உரிமை ...போராட்டம் ...
....ரத்தம் ...போர் ...சண்டை ....குருதி ...
...என ...இந்து முறை இல்லாமல் .
..இந்த முறை இருக்கும் ...

....
...மொழி ..இனம் ...வெறி என ..இல்லாது ...
...மனிதன் ...செல்லும் நடு பாதயை ...
...படைக்கும் வல்லமை ...இயற்கை ...
...அது வந்தனப்பொய்கை ......
...வலிமையான கொள்கை .....

....மனிதம் தின்னும் தேசியத்தை ...கேள்வி கேட்டு ...
...மாயை சொல்லும் மொழி தன் செவில் உடைத்து ...
....கோவில் நுழைய போராட்டம் இன்றி ..
அந்த தத்துவத்தை வேரோடு புரட்டும் ...
....தம்ம புரட்சியில் ...தடம் கொண்டு ஓடிட ...
...
....இதோ தனியாய் ஒலிக்கும் தம்ம பறையில் ..
...வங்ககடல் எழும் ....வா என் சேரியே ...
.....கேள்வி மட்டும் கேள் ...நீ யார் என ?
...பதில் வரும் முன் ...பாசம் வந்திடும் ...
....
.......போதி இலை ஒளியில் முகம் கழுவி ...
...ஆதி ஆதி என சொல்லும் சொல்லில் ...
...அரகன் உதிர்கின்றான் பார் ...
...அவன் சாதி மதம் அற்ற சாக்கிய போர் வீரன் ...

...அவன் போரில் மாண்டவர்கள் ...
...மனிதர்கள் யாருமில்லை ...
....மனித உருவில் உலவும் மனம் கொண்ட மிருகங்கள் ...
....
.....தமிழ் அங்குலிமாலாக்கள்...
..தலை குனியும் நாளை ... தம்ம பதம் சொல்லும் ...
.....அதில் சேரி தலைமுறை வெல்லும் ......
...வெறி இறந்து போய் ...முறை வளரும் ....
....
மதமும் சாதியும்
..மொழியும் ...இனமும் ...
..தம் வெறிக்கதவை மூடிக்கொள்ளும்
..தம்ம முறை.... இதயம் செல்லும் ...
..அதையே ......என் பறை பாடி சொல்லும் ...



வீரமணி
இணைபேராசிரியர்
டெல்லி

Saturday, January 1, 2011

....முலைப்பால் தெறித்த முதல் ஆண்டு ....


....முலைப்பால் தெறித்த முதல் ஆண்டு ....
வேட்டுவர் குலம் வாழும் விழல் நிறைந்த ஏரி வழி ...
..பாட்டியின் வீடு விட்டு ..பகல் பொழுதில் எனை தூக்கி
...செடி விளக்கி செந்நெல் புலம் பார்த்து ..
சேடை வாசம் மூக்கு தெளிக்க ...அள்ளி பருகிய ...தண்ணீர் ... அம்மா உனக்கு ...

அழுது அழுது என் கன்னத்தில் கருவெண் கோடு ...
...பொழுதுகள் புரியாது உன் தோல் மேல் தொங்கும் ..நான்கு கிலோ நான் ...
...முறம் வீசி புறம் போகும் பதடு ....உன் கண்ணில் பட்டுதெறிக்க...
....ஓ வென அழுத எனக்கு ஓமவாட்டர்...ஒருபுற முலைப்பால் கிட்டாமல் .....

உன் பாதம் மெதுவாய் ...நான் பாலைவனத்து ஒட்டகபயணிபோல்..
( பாளயத்தாளை ஒண்டி வாழ்ந்த பயணி )
...ஆடி ஆடி ...அயயஹோ உன் வலியறியாது..அம்மா ..
..நீயோ வழியறியாது ....சாராய குடிகாரன் வீடு நோக்கி .....

போய் பேசி வாழும் சாதி நிறைந்த நாட்டில் ...
...மெய் மறந்து வாழும் மெல்லிய புரட்சியா அம்மா ..நம் வாழ்க்கை ,,,,?
..பின் யார் அடித்தது உன்னை ...என் அண்ணா கயிறு வரை கண்ணீர் உருள ....?
....அப்பனா அல்ல அவன் பின் உள்ள சாதி 'வெப்பனா' (Weapon) ....

சர்கார் தந்த கைத்தறி புடவையோடு ...நம் பெண்டியரும் ...
....நாத்தாங்கால் வரை வாழும் வெள்ளை வேட்டியோடு நம் ..ஆண்மகரும் ...
..சமைந்த நொடிக்குள் சாதியில் வறுபடும் ..நம் பெதும்பையரும் ....
...சூத்து தெரிய சூதில்லாது அரைகால் சட்டையோடு நம் மழலையரும் ...
.............மாண்டுபோவமா அம்மா ....? ..
.மீட்டு வருவது யார் நம் சிந்திய வரலாற்றை ...?
...
..அன்று செஷங்கனுர் ரேஷன் கடைக்கு போக ....
..நீ அட்டை எடுக்க தேடினாய் ...சாமி அறையில் ..
.நானும் அட்டைபோல் ஒட்டிகொண்டேன் ..உன் முதுகில் ....
.....மணி பகல் ஒன்னுக்கு மேல் ....தார் சாலையில் உன் கால் உருகியது ....
...பூங்கானம் கௌண்டர் வாய்கால் நீரில் கால் பதித்து ...
..புழுதி வழி நீ போக ..அயயஹோ ...அனல் ...
.............நாபகம் இருக்கிறது ..உன் புடவையை தரையில் போட்டு ...
...................புழு போல் ஒரு அடி இரு அடி என புலம்பி நீ நகர்ந்த புதிய வரலாறு ...........

கார்காலம் பிறந்ததும் கரும்பு சுமக்கும் கூலி வேலை நீ போவாய் ..
...மார்கழி பூசணிக்காய் குழம்பு மரகதம் அக்காளுக்கு நீ கொடுப்பாய்...
...வெள்ளகுலம் மண்வாரி நட்டு வைத்த ஆலமரத்தில் ....
...சொல்லாமல் செத்த சேரி பெண்களின் ஆவிகளை குரி கேட்டு சொல் ...
....அவர்களின் குறி கடித்து குதறிய சாதி வெறி...நம் ஊரிலா உலாவருகிரதென ?

.....திசெம்பர் பூவும் ...பப்பாளியும்...தினம் தினம் கொடுத்தும்....
..பழைய சோத்தோடு காரக்குழம்பு தா என ..கௌண்டர் பெண்ணை அண்ணன் கேக்க ...
...........நாயே உனக்கு என்னதிமிர் என அண்ணனை அடித்தது யார் அம்மா ?
..பின் ரத்தம் கேட்டு ஆச்பிதிரியில் நடு ஆண்ட அழுதபோது ...
............நரசன் சித்தப்பா கொடுத்தது ...சாதியில்லா ...வெண் சீழா?

..அஞ்சாம் வாத்தியார் ...உக்கார உரலை துடைத்து தர ....
....யார் மா..இந்த பொடிப்பயல் என புவனகிரி தமிழில் அவர்கேட்க ...
...சார் ..சார்...என் பதினோராவது புள்ளை என ...வெள்ளக்காரன் மொழியில் நீ சார் சொல்ல ...
......பள்ளிகூடத்தில் அடுத்த வருஷம் அனுப்பு இவனை...
.............அவர் சொல்லி முடிப்பதற்குள் நான் அம்மாவின் முந்தானைக்குள்..அடைக்கலம் ..

..மாச பொறப்பு வருஷ பொறப்பு ஆனா போதும் ...
..இந்த சாராயம் குடிகாரன் ..எங்காவது போய் ...சம்பாதிச்சு குடிச்சிடுவான் ...
....ஆண்டில் எப்பாவது சுடும் இட்டிலி வடை அலுப்பில் ......அம்மா ..

....ரோடு போட வைத்த கருங்கல்லை துண்டில் சுருட்டி அடிக்க வரும் அப்பா ...
....ச்சே ..இது மனு உனக்கு சொன்ன பாடமா?
...ஆணாதிக்கத்தின் ...முதல் சூத்திரம் ..இந்துத்துவம் சொன்ன ...பெண்ணடிமை ....
............இது சேரியில் எப்படி தொத்திக்கொண்டது ....
....ஒ! சாராயம் ..சாதி பார்க்காமல் தரும் ..கிராமத்து பொதுஉடமை ஆணாதிக்கம் ...?

...........உடைந்து போனது ..இட்டிலி குண்டானும் ....வடை சட்டியும் ....
...மூட்டிய அடுப்பில் இருந்த மூணு செங்கல் ...
....எதிர் வீட்டில் எறிந்த சவுக்கை விறகில் ....சரணடைந்தது .....
......அம்மா என்னை மட்டும் தூக்கிகொண்டு..மாரியாத்தா கோயில் பக்கம் ஓட ...
...........அண்ணன்கள் சிதறி ஆலமரத்தின் ...வேர் பக்கம் ஒளிந்து கொள்ள ...
..............அப்பாவின் ...தாண்டவம் ...அடடா ...ஆணாதிக்கத்தின் ...ஒரு ..மாதிரி நடனம் .....

...........பாளையம் மட்டுமே அம்மாவுக்கு தெரிந்த ஆறுதல் மாநகரம் .....
........பத்து வயல் வேலி தாண்டி பத்திரமாய் எனை பிடித்து ...
...................ஏரிக்கரை மடுகில் எனை விட்டு ...த...எக்கா எக்கா ...என் ...
....நண்டு ஊமச்சி ...கெளுத்தி என் ...மகிழ்ச்சியில் பெரியம்மா .............
............என்னாடி..குடிகாரன் வேலைய கட்டிடானா வருசபொரப்பில்..............

............பனம்பழம் சுட்டு ...பல் முழுதும் நார் பிடிக்க ...கடித்து தின்னும் கருப்பு மேனிகள் ...
............எனக்கும் தர ....முதன் முதலாய்...நானும் பால் மறந்து தின்ன பனம்பழம் ....
......நண்டு குழம்பு ....ஊமச்சி அவியல் என் என அம்மா...எனக்கும் ஊட்ட ...
.....................அண்ணன்களை நினைத்து அவள் அழுததும் ...எனக்கு அன்றைய வலிகள்...

......அடுப்பில் கிடக்கும் அரை குறை மாவு ...
மல்லாகொட்டை சுடல் ...பனம்பழம் .....
............பைதன்காய்அவியல் ..பப்பாளி காய் ...
பழைய அரிசி ஊறல் ...பிணம் சக்கரை ...
பொரிக்கும் முன் உடைத்த அடை கோழி முட்டை ..
.பொசுக்கி தின்னும் ராமநத்தம் குருவி ...
.........கல்லால் அடித்த கல்லுகுருவி ....
சேரியில் யாரேனும் தந்த யாசக சோறு ....
.....ஓடும் ட்ரக்டரில் ஒடித்து தின்ன கரும்பு ....
முளியமரத்தில் ஒளிந்து சுடும் மரவள்ளி கிழங்கு ....
....அம்பது காசு ...ஒரு ருபாய் ...சேமிப்பில் வாங்கி...
பல் விலகாமல் தின்னும் ...சிகப்பு சேமியா ....
.....என அண்ணன்கள் இந்த காலத்தில் தின்னும் அவசர உணவுகள் ....
................அம்மாவின் கண்ணீற்கு அதுகூட ஒரு காரணமோ ..?

.....திரும்பி ...வீட்டிற்கு அவள் வரும்போது ....திரளாய் மடை உடைந்த கண்ணீர் ............
....ஏரி வழி எனை சுமந்து ......வீட்டை நினைத்து ..அவள் வாட .....
........அண்ணன்கள் ஓடி வர ...அம்மா அம்மா ..என் அழுது புலம்ப ......
..........பாசமென்றால் என்ன என் அந்த பறைச்சி காட்டினாள் அன்று ...
........ஐயோ நான் பெத்த பிள்ளைகளா....முனகல் சத்தமும் ...மூக்கு சிந்தி ...போட ...
....நல்ல தங்காள்............ ...கிணத்தில் போட்டதுபோல் இல்லாமல் ....
எங்களை ..பள்ளியில் போட்டாள்...


ஓல மட்டை ஒழுகும் ..எங்கள் வீட்டுக்கு ...அழைத்து வந்தாள்...எங்களை ....
.................நானும் அவசரத்தில் ..அவள் முலை பால் குடிக்க ......
...............அவளும் புன்னகையோடு ...பிள்ளைகள் பார்த்த ஆவலில் ...
,,,,,,,,,,,,என் கன்னம் ,கழுத்து ,முகம், நெற்றி ,மார்பு ..என்று ...பால் தெறிக்க ...
..................
....நான் பார்த்த ...புத்தாண்டு ...
.......முலைப்பால் தெறித்த முதல் ஆண்டு ..............................
....


இப்படிக்கு ...........
பாசக்காரன் வீரமணி ...



VEERAMANI .S
Asst. Professor/ Placement Co-ordinator(MIB),
Centre for Management Studies,
Jamia Millia Islamia( A central University),
New Delhi, India.

Thursday, December 30, 2010




An ode to Obama ………………

You ran pell-mell in the dark woods

On the shores of Kenya

I ran same way with the torn school bag

On the way to Thirumangalam* burial grounds…

*A place near Madurai in South India

When you thrashed out in Washington courts

I bickered with Vazhudhavur vanniars**…

** Caste Hindus

The dream of Dr. King was as lovely

As a smoked beef on a thatched leaf

Law of Manu and principles of Gandhi…smelted in the Cheris*** urine …

Like stinking cow dung…

***Cheri is a slum where untouchable live

The anger of Abraham Lincoln was a spine

For the dented American blacks…

Dr. Ambedkars fistful fury was

Our back up umbilical chord…

And a wet fertilizer on the roots

Of our lifeless vines…

When you called your formula CHANGE

We were eased that you understood

Our Father Ambedkars rebellious songs…

But your brash of Gandhis epic

Smelt like the puke of Pondicherry Anjapuli *^^

After his gulp of illicit arrack..

*^^ he is a drunkard

You went to study law with an injury

Of thorn bite on your toes

I went to Delhi (JNU) with just a dollar in my custody…

As you looked exactly like my elder buddy

Anjalai amma* welcomed you to

Eat tapioca in a delicious dry fish curry…

*Anjalai is mother of the poet

You went to eat mutton with

Man Mohan sing and witnessed

Doves in Humayuns tomb…

But, Shivalingam** Thotti ***

Prepared soaked rice

In the left over sugar after

Burning human carcass…

** Shivalingam is father of the poet

*** Thotti is a street cleaner who also burns human carcass in the burial ground

You danced with Micheli Mathini ****

In the TAJ after dinner with Ambani…

Our million people waited with

Parai*^ and periamelam Munusami*^*…

****elder brothers wife

*^ Parai is the drum played by dalits

*^* a famous drum artist who plays big drum

We invited you to see Ambedkar in out thatched hut

You went with Gandhi in the luxuriously simple chalet…

Come again … come again my elder brother

Our people are waiting to host you

With hand pound rice rolls

Our history of love and fraternity is the binding agent

With a dash of black Negroes spiciness

Eat to your hearts contentment

Lets dance to the drum tunes of

Periamelam Munusamy

You choose the moonwalk of King of pop….

Casteist sadists queued up behind your buttocks

Not as a black …but as a president of US

In the shit feeding villages are the

Computer literate slaves

The Indian Negroes….

Yes their name still untouchable …..

For the first time Indian alligators chased

Crows with their right hand while eating***

***(Expression of showing sympathy)

When your flight landed in Mumbai

Wily casteist Indians out cried

Obama….Obama….

With the intolerable pain of their whip

We cried appa amma **

**( Father mother)

They blind folded you with black ribbon to thwart seeing us

You walked on the red carpet soaked in our blood…

You celebrated Diwali with oppressor maniacs

They didnt even give us a torn cloth

To wipe oozing blood on our lynched ass…

No problem we will use the

Indian flag after removing Ashoka Chakra

Anna** Obama Anna Obama

**(Elder brother)

You know there is also salt in

The food prepared with the money

Of Anjalais sweat on weeding and

Sivalingams funeral pyre drum coolie…

Even this poem is the begging bowl from that money…

When you returned from Delhi every one shouted

Obama….Obama…

I cried alone near the India Gate (Delhi) …..

Appa … ammaa…

(Father Mother).

(Written by VEERAMANI, during brother Mr Presidents’s visit to India)

(Translated by Raju Arumugam, Humphrey fellow, University Michigan, USA)

VEERAMANI

Asst. Professor, New Delhi

INDIA.

veerajnu@gmail.com

Saturday, December 25, 2010

சுட்டு போட்ட சுனாமி ..................


சுட்டு போட்ட சுனாமி ..................



..மீந்த மீனை காய்ந்த மணலில் ...போடு ..என
..தங்கையா ...சொன்னான் ...வள்ளியிடம்
...தா ...பள்ளிகொடம் போவல ...போ ...போ ..
...என அதட்டினார் . செங்கேனியை ...லாரன்சு வாத்தியார் ....
...ஏன்டா ...பட்டுச்சா ..இன்னிக்கி ...இல்ல... தெக்க..போடா நாளைக்கு ..
...கத்தினான் கடலில் நின்றே ..கொக்கி ...ஜோசப் கிட்ட ....

ஏன்டி இன்னைக்கு தேதி இன்னா ... 26 டி ...
....இங்கிலீஷ் மாசமா ..தமிழ் மாசமா ...
....தெ தெரியல ..தொ ..பாதர் ..கிட்ட கேளு ...என்றாள்...மீனாம்பாள்....
...கெடா வெட்டனும் ...இன்னு முனியாண்டி ..புலம்ப ...
...மாதா கோயில் போவனும் என ..அந்தோணியம்மா ...சொல்ல ...

..............உப்பு செட்டியார் ..காய் வண்டி .. காய் கறி ..காய் கறி ....வாங்கம்மா ....
...குப்பத்தில் நுழைய ........ஊரே கூடி ...ஒன்னா நிக்க ....
..ஓடி வந்தான் ...ஸ்டீபன் ....பிரபு ...இன்னும் இரண்டு பயல்கள் ...
...தெ எம்மா ..தெ எம்மா ...சீக்கிரம் வா கடல்பக்கம் ....
...சீண்டி சீண்டி இழுத்தான் ...முப்பது ருபாய் மீன் வித்த காசை ..
.............முடிந்திருந்த ...பாக்கியம் அம்மாவின் முந்தானையை ..........

... முதல் அலை வாரிவந்த...கடல் மீன்... அடடா அடடா ...
துள்ளி துள்ளி குதித்தன ..மீன் கூட்டம் ..
..அதை அள்ளி செல்ல குதித்தன மனித கூட்டம் ...
( சுமத்ரா அனுப்பிய எழவு செய்தி அறியாமல் )

....கனகம்மா .. போன் செய்தால் ..முருகனுக்கு ..
...மாமா ..சீக்கிரம் திரும்பி வா ...
...கரைல மீன் தட்டுது ....கடல் விட்டு வா என ...
....அவன் படகை திருப்புமுன்னே....
...அம்பது கிலோவுக்கு மேல் மீன் பட்டது இவள் கூடையில் ....
...
அவன் நாகை எல்லை தாண்டி காரை பகுதியில் ...நுழைய ...
...கத்தினார்கள் பூம்புகார் மீனவர்கள் ...
...டேய் ...ஏன்டா ..என ...
இவன் மட்டும் திரும்பினான் ...கரைக்கு ..( எழவு பார்க்க) ......

மாதாவின் கோவில் போகும் ..மழலையர் ..
...வலை பிரிக்கும் நெய்தல் வீரர்கள் ...........
காலையிலேய..பிரசங்கம் துடங்கிய ..பாதிரியார் ...
....கிறிஸ்துமஸ் வாழ்த்துசொல்ல ...மினி பஸ் ஏறி அக்காவீடு போகிற ஷீலா ...
..ஒத்த பறையோடு..தம்புரா போட்ட முனிசாமி ...
...........நாளைக்கு எல்லோரும் பஞ்சாயத்துக்கு வரணும் ...தலைவர் உத்தரவு ........
...தமிழக அரசு பேருந்து கண்டக்டர் ...டீ குடித்து ..முடிக்க ....
..நாகூர் தர்காவில் கூட ...பாடல் ஓசை துவங்க ....
.............வேதாரண்யம் வழியாக வேளாங்கண்ணி போகும் புஷ்பவனம் ..சேரி மக்கள் ....
எட்டு மணியாகியும் எரியும் ...சீரியல் பல்புகள் ....
................என இயல்பாய் துடங்கிய 26 டிசம்பரை ...எழவு நாளாக்கிய பாவி யார் ...

...கடலாடி திரும்பிய ..படகுகள் ...சிலிர்த்து நின்றன ..சற்று உள்ளே ...
மிதந்து வந்தன கரையிலிருந்து பிணங்கள் ....
..படகுகள் ..பல்துலக்கிகொண்டன தம் உடலுரசிய ..சிகப்பு சதை குச்சிகளால்....
...கை பேசிகள் ..மெய் பிரிந்து மாண்ட மனிதர் கரம் பிரிந்து போனது .. ...
.........இனி தொடர்பே கொள்ள முடியாத எல்லையில் ஒதுங்கின பல்லாயிரம் உடல்கள் ....

உறவுகள் உணர்வுகள் உரிமைகள் உண்மைகள் ...
...ஒன்றாய் மாண்டிட ஓடி வந்த இந்த அலைக்கு பெயரென்ன சொல்ல ....
..பட்டனம்சேரி மக்களெல்லாம் ....தர்காவுக்கு ஓட ...
...பாசக்கார குழந்தை விட்டு தாயவள் வாட.....
..முடி மாட்டி செத்த இளம்பெண்கள்.....பாவம் ....காதலன்கள் இன்னும் ஆழ்கடலில் ...

வெட்டாறு அள்ளிவந்த வேற ஊரு பினமெல்லாம் ..
..நாகை கடலில் கரைந்தன ...
..வீணாகிபோனது ரேஷன் அட்டை ....பட்டியலின்றி,,,,,,,,,,,,,,
..கருப்பு மண்ணை எடுத்து அப்பிகொண்டன ..மீந்த மனிதரின் இதயம் ...
..கசப்பு சுவையை ..இனி என்றும் துப்பும் காரம் பார்த்த நாக்குகள்...
....
இத்தனை பேரா உயிர்த்தெழுவது யேசுராசா எழுந்த நாளில் ...
....மீனவ தொழுவத்தில் மீண்டும் பிறக்குமா செம்படவ சிங்கங்கள் ...
...சிகப்பு தாவணி வாங்காமல் செத்த காதலிகளுக்கு ..
...புத்தாண்டு பரிசு என்ன தருவார்கள் ..கருமாதி பந்தலில் ..காதலன்கள் ...

கடலூர் ..கன்னியாகுமரி... நாகை ....பாண்டி ...
...மரக்காணம் ...பூம்புகார் ..வேளாங்கண்ணி ..கல்பாக்கம் ..
...மேல் மணக்குடி சைமன் கோலோனி ..பட்டனம்சேரி ...வெட்டாறு ..
..காரை ..வேதாரண்யம் ..இன்னும் ஆயிரம் இடம் பெயர் ...தெரியவில்லை ...
...என மாநிலம் முழுதும் மாவட்டம் பிரித்து ...
...வட்டமிட்டு ..வலை போட்டு சுட்டு போட்ட சுனாமியே ?????
.....எமை வெட்டிபோட்ட சுனாமியே ???

குண்டுகள் இல்லாது துளை போட்ட உன் துப்பாக்கியை யார் செய்தது ...?
...அம்புகள் இல்லாது குத்திய உன் வில் யார் வளைத்தனுபபியது ?
...அமிலம் இல்லாது எலும்பு குடித்த உன் திரவம் செய்த வேதிகூடம் எது ?
..அரை நொடி கூட .. அனுமதி தராது ....எமை நீர் கயற்றில் தூக்கு போட..
..தீர்ப்புதந்த ...உன் நீதிமன்றம் எது?

அதோ ...நெய்தல்தினை பயத்தில் கிடக்கும் ...26 டிசம்பர் ...
....இரண்டாயிரத்தில் உலகம் அழியுமென்றர்கள்...
..ஆனால் இரண்டு மூன்று லட்சம் பேர் மட்டுமே அழிந்தார்கள் ....
...சார்ந்த உறவுகள் இன்னும் நினைவில் ....அழுதுகொண்டே ........

....நரம்பு முருக்க ..இரும்பு இழுத்து ...
...விசைப்படகை ..வசபடுத்தி...மீன் சொரியும் ...
...வீர வம்சத்தை ..கஞ்சி வரிசையில் கட்டிய சுனாமியே ...உனக்கு ...என்ன திமிர் ?

....கங்கம்மா கும்பிட்டு ..கடல் தாய் மடி உறங்கி ...
..தென்னை தென்றலில் நெய்தல் தாலாட்டில் ...
...மீன் வாசனை பூ புடவையில் ..கண்ணுரங்கிய...
....பிஞ்சுக்களை முழுங்கிய ..நஞ்சு சுனாமியே ?
.................சீ...நீயெல்லா
ம் ஒரு அலை ?

...கரையை கல்லரயாக்கிய...சுமத்ரா அனுப்பியே எழவே ....
....தூங்கு மூஞ்சி அதிகாரிகள் விழித்த பின் வந்திருந்தால்..
...மீந்த உயரின் எண்ணிக்கை ..மேலாகியிருக்கும் ....

.....பிணத்தின் மேல் பணம் என்னும் கொள்ளை பார்...
...அரசின் ஆயுதம் சிரிக்கும் காந்தி முகத்தில் சிக்கி கொண்டது ....
..நாசிக் பேப்பர் நாத்தம்...பிணை நாத்தத்தை...சந்தன மனமாக்கிற்று...
...இறந்தவர் பெயரில் வாழும் இந்திய நிர்வாகம் ....
....சிந்திய சலுகையில் ..சீர் கேட்டு நிற்கும் பூர்வீகம் ....

.....நெய்தல் தினையே ...புரிதல் வேண்டும் புரட்சி படைக்க ...
....காவல் துறைக்கு மீன் வறுவல் வேண்டும் ...நாக்கு ருசியாய் ...
...வஞ்சிரம் வேண்டும் ...கப்பல் துறைக்கு ...
.....ஆனால் ...சீற்றம் வரும் நேரம் ..சுனாமி வரும் செய்தி ...
...தில்லியில் ..வந்தும் ...ஏன் உங்கள் திண்ணைக்கு வரவில்லை ...........

....மீனவ தேசத்து .... இளவரசே
..கடல் தான் நம் மூச்சு ...
...படகுதான் நம் வாழ்க்கை ...
..கரைதான் நம் சொந்தம் ...
...மீன்தான் நம் மூலதனம் ....போராடு கடலில் ...
.....சோறு போடு கரையில் ....

.....வரலாற்றில் நம் முன்னோர் இதைவிட ...
பெரிய சுனாமியை ..எட்டி உதைத்து கட்டிய குப்பம் இது ...
...இந்த சிறு அலை என்ன செய்யும் உன் ஊரை ...

..அதோ அந்தமான் விளக்கொளி ...அடர்த்தியாய் ....
...சொந்தத்தை அழைத்து சூறையாடு கடலை ....

...கலங்கரை விளக்கங்கள் கண்சிவந்தழும் ...
..கடலில் நீ இல்லாதது கண்டு .....
..அதன் கண்ணீர் துடைத்து ....முத்தம் கொடு
... உன் படகின்கொடி பட்டு சிதறும் ஒலிகற்றையால் .............

ஒவ்வொரு அடி ஆழம் நீ நுழயும்போதும்...
....என் மென்மனம் ஊரும் உன் நினைவில் ... ..சேரில் கிடக்கும் கெளுத்தி போல் .......

.....இன்னும் ஒருமுறை சுனாமி வந்தால் ..... ...........
..................எழவு சொல்வோம் கடல் தாய்க்கு ..............
.....கரைக்கு இனி கண்ணீர் இல்லை ....
...தாய்க்கு நீ தலை பிள்ளை ...கடல் தாய்க்கு நீ தலை பிள்ளை ...
.....

....நீ துடுப்பு போடும் சத்தத்தில் ...எங்கள் மீனவரின் அடுப்பு எரியும் ....
..நீ துள்ளி பிடிக்கும் மீன் வந்தால் கரையில் நம் அருமை புரியும் ....

.................அன்று என் கவிதை ...கடலையோ ....அல்ல அலையோ ...பற்றி அல்ல...
..உன் கருத்த மேனியில் .. படர்ந்து பூக்கும் ...உப்புபூ ....பூத்த அதிசயம் பற்றிதான் .....
.........................சுனாமியின் முகவரிக்கும் சூடாய் அனுப்புவேன் உன் வீரம் பற்றி ...........


இப்படிக்கு ...........
...............நெய்தல் திணையின் நினைவில் ...வாடும் ..
...............இங்கொரு மருத நாட்டு கருப்பன் ....வீரமணி ...............

...

பாசக்காரன் வீரமணி
புது தில்லி ,
இந்தியா.

Wednesday, December 8, 2010

எலும்பு சத்தம்............


எலும்பு சத்தம்............

...நரம்பு மண்டலம் தோல் தாண்டி துடித்தது ..
...பரபரப்பை தூவின செய்திகள் .. குளிர்காலம் தில்லியில் ...
...சீமான்களும் சீமாட்டியரும்..மிடுக்கு ஆடையில் ...
....கால் வலிக்க கடை கடையாய்..ஏறி ..
...தோல் வலிக்க பை மாட்டி..பொருக்கி கொண்டனர் .
...அப்பாடா 2011 ...கூல் டு ஹாட் ..... .யார் செத்தா நமக்கென்ன ?

ரீபோக் தொடங்கி ...அல்லேன் சல்லி வரை ..அடைக்கலம் அக்குளில் ..
...காசப்லான்கா ...7000 ..நிகி 3000 ..என...
...தானியங்கி பண (ATM) கார்டுகளை ...சொருகி எடுத்தால் முடிந்தது ..சந்தை .

......ரேஷன் கார்டு ..கூட இல்லாத மனிதர் ..சுமையாய் இந்தியர் பட்டியலில் ...
..ஒவொரு ..சிகப்பு விளக்கு சிக்னலிலும் ... உடல் மூடாது ..
...இன்னும் கருப்பு மனிதர்கள் கை நீட்டி ...பிச்சை ...
..........ஒன்பது மாத நிறை கர்ப்பிணி கூட ..உடல் காட்டும் அவலம் ..
.................தில்லி சாலையில் தினம் அரங்கேறும் ....

சுரேஷ் கல்மாடிக்கும் ஷீலா தீக்ஷிதிக்கும் ...தெரியாத ரகசியம் ..
....அது தில்லி ரோட்டில்....வெள்ளைபார்வையில் படாது போன ..கருப்பு மனிதர்கள் ....

காமன் வெல்த் ..வீரர்க்கு ..தனி சாலை போட்ட..அரசாங்கம் ...
....இந்த மனிதர்களை ...வேலி போட்டு மறைத்தது.....
..பூர்வீக குடிகள் மறைப்பதே குல தொழிலாய்..கொண்ட ...இவர்
.....நீதி தேவதையின் ரிப்பனை திருடி ...திறந்த விழி குருடராய் ..திகைப்பார்......

...ஓங்கி அடித்தார் போலீஸ்காரர் ...ஒரு பிஞ்சு பிள்ளையை ...
.................பச்சை விளக்கு போட்டபின்னும் ...கார் கண்ணாடி தடவி ...
..கருணை இல்லா மனிதர் முன் குரங்காட்டம் போட்டதற்கு ...
....கன்னத்தில் சிகப்பாய் வலி ...சிக்னல் மட்டும் பச்சை .....

...................ஒய் ரிக்சா ...கித்னா லேதே ...ஆர்ட் பாகில்ட்டி ...ஜானா .. டிகே ...
...
ஆஞ்சி செல்லேங்கே ...பீஸ் ருப்யா...மேடம் ...
....அரே பாகல்...செல் ..........தஸ் லேலோ ...
..

என பேரம் பேசி நான்கு பேர் அமர ....
...எஞ்சிய ...உயிரோடு ..ஏறி மிதித்தான் ...பீகார் மாநில ..ரிக்ஷாக்காரன் ...

...உடலின் சத்தமும் ..பெடலின் சத்தமும் ஒன்றாய் கேட்டது ....
கிழிந்த லுங்கியில் ..தொங்கியது அவன் மூலதனம் ...முப்பது ருபாய் ...
...ஒரு மேடு வந்தது .. போர்களத்தில் ..எதிரியை ...
...கண்டது போல் மூச்சு முறைதாண்டி சிதறியது ...
................வண்ண வண்ண கார்களும் ...காதலில் திளைக்கும் இளசுகளின் ...
....இருசக்கர வாகன ..சத்தமும் இவன் உயிரை ..இன்னும் உரிந்தது ....

யாரை அழைப்பான் ..இந்த இளைஞன் ....
...முலைப்பால் ஊட்டி வளர்த்த தாயையா..
..அல்ல முனகி சாக கிடக்கும் ...தகப்பனையா...
.........மூன்றாம் வகுப்பு படிக்கும் தமபியையா..... ..அல்ல சீதனம் பத்தாமல் ...வீட்டில் கிடக்கும் பாசக்கார தங்கையைய...
.
...............யாரை அழைப்பான் ..
.....இந்த ஊர் தின்னும் கூட்டத்தை...
....தன் ஒத்த நாடியில்..தூக்கிபோகும்... பூர்வீக குடி ....

...........ஒரு பெருத்த சினம் அவனின் கண்ணில் ..
அவன் முகத்தில் ...அவன் மூச்சில் இருப்பதாய் உணர்ந்தேன் ......
..........தேர்வு முடிந்து ...திரும்பிடினும் .....

...சட்ட புத்தகத்தை ...நழுவவிட்டது போல் ..ஒரு ...மாயம் ........
..........அந்த காட்சி கண்ணை குத்தியதால் ...........
..நானும் ஏறித்தான் போகவேண்டும் .....
....இருபது ருபாய் தந்து ...................

விஸ்வ வித்யாலய ...மெட்ரோ ரயில் நிறுத்தம் ...
....காவலர் லத்திகள் ..ரிக்ஷகரர்களின் முதுகில்தான் ....
..............மேலும் ....காத்து பிடுங்கி விளையாடும் ...
காட்சி பொருளாய் இவர்கள் ரிக்சா வண்டி ...................

...............ரயில் தடம் புகும் வரையில் ...
..அந்த எலும்பு சத்தம் என செவியில் இருந்தது ...........
.....நினைக்க நினைக்க ....
....என இடது மார்பில் எதோ ஒரு சத்தம் ...
.........................ரத்த பாசத்தில் ...அவனுக்காக...என் எலும்பு ....
.............பிழன்று திட்டியது .....



பாசக்காரன் வீரமணி .

Sunday, November 28, 2010

சென்னை சாலையில் எங்கள் சுடுகாடு .............


சென்னை சாலையில் எங்கள் சுடுகாடு .............

காஞ்சி மாநகரில் ....ஹிந்து சங்கு முழக்கத்தில் ...
....இறுக்கமானது பறைகுடிகளின் வீரரத்தம் .....
.....பூசாரி சொன்னான் ...... மன்னன் வருகிறார் ...வரார் வரார் ...
........கழு மரங்கள் காத்துக்கிடந்தன ...எங்கள் குருதியில் குளித்திட ....

....பறையர் வெட்டி எருமைகளின் மேல் ஏற்றி வந்த அதே மரத்தில் ....
...வரிசையாய் கட்டப்பட்டு ..
...காய்ச்சிய இரும்பு கம்பிகளால் ...மூச்சு விட துடிக்கும் பிள்ளை முதல் ...
....முந்தானை பால் படிந்த பறைச்சி வரை ..
.புழையில் சொருகப்பட்டு ....தன பூர்வீக புலத்திலே பரிநிர்வானமானர்கள் ....

.....அன்று யானை தன் சங்கிலியருத்து...கதறி ஓடியது ....
.....இந்துக்கள் சொன்னர்கள் ...
....ஆஹா யானை மதம் பிடித்து ஓடுகிறது ...என ....
.....யானை நின்று திரும்பி பாலியில் பறைந்தது...
....பிணம் தின்னும் திருடர்களே ...பூர்வீக மக்களை அழிக்கும் ...
....உங்கள் மதம் பிடிக்காமல் நான் ஓடுகிறேன் என்று ...
(மதம் பிடிக்காமலே கோபப்பட்ட முதல் யானை ...காஞ்சி தம்மா யானை )

....அது வரலாறு ....

....சத்யாவாணிமுத்து சொன்னார் சட்டமன்றத்தில் அன்று ....
..குடும்ப கட்டுப்பாடு ..சேரிமக்களை ஒழிக்க சதி என ....
..50 ருபாய் ..ஒரு வேட்டி..ஒரு புடவை அஞ்சிகிலோ அரிசி ....
....மண்ணாங்கட்டி மாமன் கருப்பாயி அக்காவுடன் சென்று ..... ....கட்டிங் செய்துகொண்டார் ....முடிந்தது மூணு வோட்டு ....

....இது 70 களில் ....எங்கள் நாடு

மிச்ச மீதி கூவம் கரையும் ...கூடி நின்றது ...குடும்ப கட்டுப்பாடுக்கு ...
.....சாதி பெயர் கேட்டால்....எல்லாம் ஒன்றே ..பறையன் ..சக்கிலி என ..........
..அடடடா அலுவலர் முதலியோ ..செட்டியோ ...வன்னியனோ ...
....யாரோ ........யாமறியோம் ..பறை(பரா) பரமே ..........

...முடிந்தது முப்பது நாளில் ..சென்னையின் சிறப்பு ...
..பூர்வீக விந்துக்கள் புட்டுகொண்டன ..கூவம் கரையோரம் ............

....வெள்ளை ஆடைகள் ...மாத்திரை பெட்டிகள்...
....மயங்கி மயங்கி நகர்ந்தன ...மாநகரம் தின்று செரிக்காத யாப்பதொடு ...

.....செங்கை மாவட்ட சேரி மக்கள் ....உற்சாகமாய் இருந்தார்கள் ...
...தேசத்தின் பணியை தாமரியாமலே செய்திட ....
...அந்நேரத்தில் ...குடியானவர்கள் ...கூத்தியாளுகோ ..கொண்டவளுக்கோ ...
....கருகொடுக்கும் காம பணியில் திளைதிருக்கலம் ......

.........தமிழகம் முழுதும் சேரிகளில் ...வெள்ளை வேட்டி...வண்ணபுடவை ...
......கிழிந்து போனது மறு நாள் சேடய்யில்.....அழிந்து போன தலைமுரைபோல் ....
..............அலுமினிய குண்டானோடு ....வரிசையாய் நின்றார்கள் ...அடுத்த நாள் ....
.............ஏண்டி முனியம்மா ...சின்ன ஆண்ட மவளுக்கு ..ஆண்குழந்தயாம் ...
...சோறு போடறாங்க வாங்கடி....
... அந்த சின்ன ஆண்ட பேரன் ..70 வயது தங்கலானை ...
.............டேய் தங்க்லான் ...மடை மாறு ...இன்றான்...ஐயோகோ ........

இழக்க ஒண்ணுமில்லை அனுபவிக்க அழகான உலகம் ...
....செப்பினான் கார்ல் மார்க்ஸ் ...என்ற தாடிக்காரன் ....
...இங்கே சேரி மக்களை இழைத்து சென்னையில் உருவாகும் ...
......மஞ்சள் துண்டுக்காரனின் மாயஜாலம் .......பார்க்க வாரீர்

சென்னையில் நாங்கள் படும்பாடு .............
செத்தபின்னும் உடன் வரும்பாரு ...
.....சுடுகாடு கட்ட சேரிக்கு ஒதிக்கிய பணத்தில் ...
...தலைமைச்செயலகம் ....சரியா தவறா ....
..சரிதாண்டா கிழவா .....முறைதாண்டி வரையா...

...80 ,90 இல் .....எங்கள் நாடு

..............மார்வாடி பெண்கள் படகோட்ட ...
....அடையாறு நதி அழகான கதைகேள் ......

..... எங்கள் கன்னிப்பெண்கள் குளித்திட ..
..ஊரே பார்க்கும் இலவச கழிப்பிடம் .......
.....சென்னை நகரம் உங்கள் நகரம் ....மாட்டிவிட்டார்கள்..போர்டை
...மாநகர காவலர்கள் .....
...கருவாடு வித்த அன்தொனியம்மாளை...
...மகளிர் காவலில் மானம் எடுத்தார்கள் .....

..........இவர்கள் கருணாநிதி போகும் கடற்கரை சாலையில் ...
...முலை காட்டி நிற்கும் கண்ணகியோடு முட்டிவளிக்க நிற்பார்கள் .............
..ஜெயலிதா வீட்டுக்கு செக்குமாடாய் உழைப்பார்கள் ....
...
...சேரி மக்களென்றால்.....சினம் கொண்டு அழிப்பார்கள் ......
.....
துரைப்பாக்கம்... எக்கியம் ....
...புறநகர் .......வெளிநகர் ...என ..
குப்பை கொட்டும் பகுதிகளில் கொட்டப்படோம் ...நாங்களும் ....

....கூலி முழ்தும் பஸ்கும்...சோத்துக்கும் பத்தல....
.........காலநீடினா...கைகுழந்த மூஞ்சில் பெருவிரல் ...
.....பேலவும் ...கழவவும் ...மூணு வூட்டுக்கு ஒரு ..ரூமு ....
...ஆக நாங்கள் அடித்துக்கொள்ள ...செய்த நிர்வாக சதி .....

............ஓவென ..அழுகிறோம் ....
.....ஐயோ என கதறுகிறோம் .....
.......வெட்டவெளியில் சிறைய்டப்பட்டு ...செத்துமடிகிறோம்...........
..மூச்சி விடாது சில நொடி கிடந்தால்...
....பிணம் என எங்களுக்கு பெயரிடும் ........மாநகர குப்பை வண்டிகள் ..
...எனன செய்வது ...எனன செய்ய ...உறுப்பு மூடிய பிணம்தான் நாங்கள் ...
.........
எத்தனை முறை ...எங்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ..
.....செத்தபின்பும்...புதைத்திட ...
...தந்த பணத்தில் ...இடத்தில .....
நீங்கள் ஆட்சி நடத்த ...மாளிகை கட்டிக்கொண்டால் ...
....நாங்கள் பிணம் எரிக்கவும் ...புதைக்கவும் ...
...அதையே பயன் படுத்துவோம் ............

.....டேய் கொலகாரா ....குருடா ,,,,
....குடும்ப அரசியல் நடத்தும் ....கோமாளி ....
...திருடா......சேரி மக்கள் எனன ...
.....மலிவு விலை சரக்கா....மூட்டையில் கட்டி ...சந்தையில் பூட்ட .........

...அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையை ....
.....உன் ஆட்சி முடியும் முன் மாற்றி வைத்துடு...
...அல்ல ...உன் குடும்பம் ,,பிச்சஎடுக்கபோகும் ...குவளை ஊருக்கு ...எடுத்துபோ ...
....எங்கள் பிணம் போகும் பாதை ...பாடையை தடுக்கிறது .. அவன் சிலை ...............

......நாங்கள் உன்னால் பினமாணோம் ....
..............இனி என் தலைமுறை எழுகிறது ...
.உன் மகனுக்கு கொடி பிடிக்க அல்ல ...
....அல்ல அந்த பட்டத்து...யானைக்கு பீதாம்பரம் வீச அல்ல ............

...........எங்கள் எண்ணிகையை கண்டு ...எதிரிகளை தின்று ....
.............எம்மில் இப்போது உனக்கு விளக்கு பிடிக்கும் அடிமைகளை வென்று .........
......கோட்டையில் ..பறக்கும் உன் சூத்து துடைக்கும் துணியை இறக்கி ...

....எண்களின் கண்ணீர் துடைக்கும் .....
...நீலக்கொடி ஏந்தி வரும் யானை பறையும் ...
....அன்று மதம் (இந்து) மதம் பிடிக்காது ஓடிய நான் ....
...........இன்று .என் மக்களுகாக வருகிறேன் என்று .............

பாசக்காரன் வீரமணி