Sunday, August 14, 2011

பிணம் தின்னி தேசியவாதம்

பிணம் தின்னி தேசியவாதம்

ஆதி திராவிடனின் கால் பதித்து போட்ட ...
பூமியில் அவன் கொன்று ..
..பூர்வீகத்தை ஆண்டைக்காய் கொலையிடும்
பொல்லாத தேசியவாதம் ....

..தொல்காப்பியன் சொன்னதை ..
..தொலைத்து விட்டு அழும் பறையன் பாணன் முகம் ....!

..நிலம் என்றால் என்ன ?
..முதலி.. கவுண்டன்.. செட்டி ..ரெட்டி ..
...போன்றோரின் கைக்குட்டை காதல் கடிதம் .....

...தொடர்ந்த தோல்வியில் துயிலும் தொண்மை..
..அவைகளை கழுவில் ஏற்றும் கள்வனும் ஒருவன் ?
..நாடகத்தின் பெயர் தேசியவாதம் !

பல் இடுக்கில் தொங்கும் பகட்டு மொழிக்காய்..
..எங்களை பலியிட ஒருவன் ...
சூத்திர பதர்களின் பிடியில் 'ஒரு மாத்திரை' மனிதன் ...

மீந்த சோத்துக்கு நாய்கள் மத்தியில் ...
..போர் இடும் மனிதன் ..சாதி உலகில் ....
...அதை காத்திட இல்லை ..கை மடித்து பேசும் ...
..கருங்காலிகள் கூட்டம் ...

..திருட்டு சான்றிதழில் படித்தவனை...
..இடி தாங்கி என்னும் ..மொழி போதை மனிதன் ...
...காடு வெட்டி கரும்பயல் ஒருவன் ..
..பறையனின் ஆளை வெட்ட ஆணை இடுவான் ...
.....அவனை குடி தாங்கி என்பானாம்...மொழி மயிர் பிடுங்கி !

..களபறையன் ..மல்லன் ...மதுரை வீரனின் ..
பிள்ளையர் பேசும் பாசம் எட்டாத .....உனக்கு ...
.வன்னியன் ..இசை வேளாளன் ...
சொல்லும் வாக்குகள் ...சாரயம் ஊறிய நா போல் .. சீ! சீ ...

...சேரிகளே ..எழுந்திருங்கள் ....
..தூங்கியது போதும் மொழி போதையில் ....

..நிலம் கேட்டு மாநாடு போடுங்கள்
..நித்தரை களையும் ஆண்டைகளுக்கு ...
... பெண் பார்க்க செல்லுங்கள் ஊர்த்தெருவில் ....
..பெயர்ந்து ஓடும் மொழிப்பாசம் ....

...வலங்கை இடங்கை எல்லாம் ...
...புடுங்காமல் அதிரும் வேரருப்பில் ...
கை மாறி போகும் ..வாய் ...சூத்து ....
...
....தேசியம் போட்ட வேலி உள் ....
..திமிரில் உலவும் சாதி மதம் ....
..அவை உடைக்க ஆயுதம் ..சேரிகளில் கிடக்கும் ...
..தோண்டி எடுக்க ...ஆணை இடுங்கள் அவர் அவர் தெருவில் ...

..செங்கையோ ...குமரியோ ...திருச்சியோ ...
...சென்னையோ காஞ்சியோ கோவையோ ....
...மாநாடு அழைப்பர் ஆண்டைகள் ...
...அவர் மச்சி வீட்டு பணம் கரையாது காத்திட !

...சில கருப்பு ஆடுகள் ...பொறுப்பாய் ...
..உங்கள் கரம் பிடித்து அழைப்பர் ...
...தேசியம் என்ற விழத்தை நீங்களே பருகிட ...

..கேள்வி கேளுங்கள் ..
.அய்யா ...ஒரு மொழி என்பீர் ...ஒரு நாடு என்பீர்
...தேசிய வாதம் என்பீர் .
.இனம் என்பீர் ..என்னவன் என்பீர் ...
...ஆனால் ...இதுவரை ..
.பொருளால் ..உணர்வால் ...உறவால் ..
..நிலத்தால் ..நீரால் ..பூமியால் ...
..பிரிந்து கிடக்கிறோமே !

...நாங்கள் போராட்டம் நடத்தினால் ...
..உம் வீட்டில் பொருள் குவியும் அதிசயம் !
..தொண்டை வறண்டு துடித்து யாம் விழின் ...
...உங்கள் கதவு மூடிக்கொள்ளும் ...ஆஹா
......இது என்ன பிணம் தின்னி தேசியவாதமா ?

..நெற்றி பொட்டில் கட்டிகொல்வோம் ...கொடி
..நெடுந்தூரம் நடப்போம் ஓடி ...
...ஆர்ப்பரிப்போம் ...அவா கொள்வோம் ...
...அண்ணன் என்போம் ...தம்பி என்போம் ...
....கூட்டம் முடிந்ததும் ...
...கூரைகள் கீழ் கரைவோம் ...பூச்சிகளாய்...

...நாங்கள் சிங்கம் என யாரேனும் சொன்னால் ...
..சினம் கொள்வார் தேசிய தமிழ் ஆண்டைகள் ...

...நீல நூல் படித்து அண்ணல் அம்பேத்கர் ..
..எமை சிங்கம் என்றார் ...
..என ஆசைகொள்வோம் வாழ்ந்திட ...
......ச்சே ச்சே அவர் மராத்தி காரர் ...
..என்பர் ஆந்திர நாயிடுகளும் ...
..கன்னட முதலியார்களும் .......

.....தமிழ் நிலத்தில் ...முத்துவேல் மகனுக்கு ..
...மார்வாடி மருமவன்கள்....
...மைசூர் ராணிக்கு ...குற்ற பரம்பரை ..தொப்புள் சொந்தம் ...
...செத்து போன் இராமச்சந்திரன் ..
.சேரியில் ஓட்டை பொறுக்கும் செந்தமிழ் நாடு ....

..மனை விற்பனை என்ற பெயரில் ...
..சேரி மண்ணை விற்கிறான் தமிழன் ...
..இனம் என்ற பெயரில் .
.சேரி பெண்களின் சீலை மட்டும் குருதி புணரும் ...

...தம்பி என்பான் தமிழில் ...தம்ளர் மட்டு தனி !
..அண்ணன் என்பான் சேரி ஏஜெண்டுகளை ...
...அட அவன் ஒரு ஆளா ? என்பான் அடுத்த நொடி !

...இரு முலைகளை வெட்டியபோதும் ...
..இலைகளுக்கே ..ஓட்டு ....
..அடி மடியில் கை வைத்தும் ...
'கை' தான் ஆளும் ..நாட்டை
....போதை மருந்து வியாபாரம் !

..சிங்களவன் கொள்கிறான் ..என சொல்லி ...
...சேரிகளை கொள்ளுகிறான் ..தமிழன் ...
..தேசிய பாது காப்பு சட்டத்தில் ...சிதம்பரம்
...சூத்திரனின் பெயர் இல்லா பட்டியல் ...
..காவல் நிலையம் ...வன்னியனுக்கும் .
.வாண்டயானுக்கும் ...காதல் நிலையம் !!

..கடலூர் மாவட்டத்தில் ..கதறி அழும் பறைச்சி ...
.....தமிழுக்கு கிடைத்த சேரி இறைச்சி !
.....துப்பாக்கிகள் கூட சாதி பார்த்த தேசியவாதம் ...
...மலையகத்தில் மாண்டு விழும் அனாதை ஆதிகள் ....
...தொடை நடுங்கி பயல்கள் ..
...பேசும் வெளிநாட்டு இன உணர்வு !

....பல்லாயிரம் ஆண்டுகள் சுமந்தோம் ...
..மதம் எனும் பல்லக்கு ...
..பல நூறு ஆண்டுகள் தோள் கொடுத்தோம் ..
...மொழி ..இன போதைக்கு ...
...பல நூறு நாட்கள் சிறையில் கிடந்தோம் ...
..சூத்திரர் பொருள் சேர்த்திட ....
...பல பொழுதில் போராடி மட்டுமே
. இறந்திடும் வாழ்க்கை எம் உலகில் ,.....

...நாங்கள் நூறாய் எழுபதுகளில் ...
...ஆயிரமாய் தொண்ணுறுகளில் ..
..லட்சமாய் இரண்டாயிரத்தில் ...
...கோடியாய் ...இன்று ..கொலை சிந்து பாடுகிறோம்
..மொழி ..இனம் .....என் குலம் அழித்த காரணி ....
......இதை இன்னும் அறியாத சேரியே ! நீ யார் அணி ?

....பார்ப்பனர் எதிர்ப்பு என்றன் ...
பகல் பொழுதிலே அலகு குத்தும் சூத்திர இந்து ...
...இந்து மதம் ஒழிப்பே விடுதலை என்றான் ...
...கோவில்களில் நிற்க இடமில்லை சாமிக்கே !

..ஆடி பூசம் ...பங்குனி உத்திரம் ..
..கார்த்திகை தீபம் ...சனிபெயர்ச்சி ...
...குறு திசை ..குலம் ..கோத்திர ராசி ...
...பல் விளக்காமல் பார்க்கும் ..பராசக்தி தொலைகாட்சி ..
.....பண்பாடு என்ற பெயரில் தமிழ் வாயில்... இந்து பிய் ....
......
...என பார்ப்பனர் ஓடிவிட்ட ...
..சூத்திர தேசத்தில் ...நாத்திகன்கள் ஆடும் ..
..இந்து -தமிழ் -இன - மொழி -சுவருக்குள் ...
..அரங்கேறும் தேசிய தேனிலவு ....
....அதில் ஊசிபோனே ஒரு சொல் மந்திரம் ...திராவிட நாடு !

..ஆதி திராவிடன் ..யாம் என்றால் ...
...அப்படிஎன்றால் ? ..என கட்டபொம்மன் போல் கேட்கும் ...
...களவானி தேசியவாதிகள் !

......களை பறித்தாயா? நடவு நட்டாயா...
..கற்பழித்தபின் ..சேரி பெண்டிற்கு தாலி கட்டினையா?
..மாமனா ? மச்சானா ?..மானம் கெட்டவனே ?
..பிய் திணித்த வழக்கில் சிறை சென்றாயா?
...கழுத்தறுத்த வழக்கில் கம்பி எண்ணினாயா ?
..ஏன் கேட்கிறாய் சேரியில் ஓட்டு !
..எதற்கு அழைக்கிறாய் ..தேசிய மாநாட்டுக்கு ?
......
.......வெள்ளையனே வெளியேறு என்றான் ....
...நிலத்தை அவன் பிடித்து ...
..நாட்டை சூறையாடியதால் ....

..வெள்ளாலனே வெளியேறு என்றால் ...
...மறு நாள் ..பொது மருத்துவ மனையில் .
....சேரி சடலம் ....அயயஹோ ....
....சேரிக்கு வெள்ளையன் வெள்ளாலனே...
...அவனை செருக்கு கொண்டு அடிப்போம் நிலம் மீட்க !

...எங்கள் சுடுகாட்டில் ...
..தனித்தே போகும் சனியில் செத்த பிணம் கூட !
...சறுக்கு விளையாட்டு ...சட்டமன்றத்தில் ..
..தலித்துகள் விஷயம் சொல்லும் பொழுது ...

....முதுகெலும்பை கொணர்ந்து காக்கும் ...
..சேரி இப்ப்பூமியை ...
...மூச்சின்றி உழைக்கும் கறுப்பன்கள் நிலத்தில் ...
...முறம் வீசி இசை போடும் பறைச்சியவள் தாலாட்டு ...
...முனகி முயன்று நடக்க தொடங்கும் நாகரிகம் ...
...நாங்கள் இல்லாது போனால் இல்லை இப்பூமி ...

....பின் என்ன ?
பிணம் தின்ன ...பெயர் பட்டியல் போடும் ..
...திமிர் தேசியவாதம் ...
..அதற்கு விளக்கு ஏந்தும் ...
..வெளுத்து போன கருத்த சில கரும்புள்ளிகள் ...
...
.....தூசு தட்டி எடுத்த வரலாறு ..
...இன்று எரியும் தழலில் விழும் கனம் ...
...வேடிக்கை பார்க்க ..நாங்கள் ...
...மொழி வெறியர்கள் அல்ல ?
...புது வழி படைக்கும் ..புத்தன் தந்த பொறிகள் !!!!
...எரிந்து கொண்டே இருக்கும் .
.எமை எரிக்க நினைக்கும் ...
...பொய் மனிதர் புரிந்து புத்தம் புகும் வரை.....

.....இன்று மொழிபோரில் இறந்த சேரி ....
....இன்று இனபோரில் மடிந்த மக்கள் ...
...நாளை எழுந்து கொள்வார் ...
..அரக மரத்தின் அடியில் பிக்குகளாய்.....

....புன்னகை புடுங்கி தின்ற பொல்லாத ..இந்து மதம் ...
...தன் பொச்சி கழுவ நீரின்றி கங்கை ஓடும் ....
....தமிழில் கலந்த இந்து விழத்தை ...
...கண்டு பிரிக்கும் கருத்தை ..
...சமணர் தீட்டிய கோடுகள் சொல்லும் ....

....தமிழில் கலந்த சேரி குடியை ...
...பாலி-பிரிக்கும் என்னபரவையாய் ...தம்மம் இருக்கும் ...

......வழிபாடு ....உரிமை ...போராட்டம் ...
....ரத்தம் ...போர் ...சண்டை ....குருதி ...
...என ...இந்து முறை இல்லாமல் .
..இந்த முறை இருக்கும் ...

....
...மொழி ..இனம் ...வெறி என ..இல்லாது ...
...மனிதன் ...செல்லும் நடு பாதயை ...
...படைக்கும் வல்லமை ...இயற்கை ...
...அது வந்தனப்பொய்கை ......
...வலிமையான கொள்கை .....

....மனிதம் தின்னும் தேசியத்தை ...கேள்வி கேட்டு ...
...மாயை சொல்லும் மொழி தன் செவில் உடைத்து ...
....கோவில் நுழைய போராட்டம் இன்றி ..
அந்த தத்துவத்தை வேரோடு புரட்டும் ...
....தம்ம புரட்சியில் ...தடம் கொண்டு ஓடிட ...
...
....இதோ தனியாய் ஒலிக்கும் தம்ம பறையில் ..
...வங்ககடல் எழும் ....வா என் சேரியே ...
.....கேள்வி மட்டும் கேள் ...நீ யார் என ?
...பதில் வரும் முன் ...பாசம் வந்திடும் ...
....
.......போதி இலை ஒளியில் முகம் கழுவி ...
...ஆதி ஆதி என சொல்லும் சொல்லில் ...
...அரகன் உதிர்கின்றான் பார் ...
...அவன் சாதி மதம் அற்ற சாக்கிய போர் வீரன் ...

...அவன் போரில் மாண்டவர்கள் ...
...மனிதர்கள் யாருமில்லை ...
....மனித உருவில் உலவும் மனம் கொண்ட மிருகங்கள் ...
....
.....தமிழ் அங்குலிமாலாக்கள்...
..தலை குனியும் நாளை ... தம்ம பதம் சொல்லும் ...
.....அதில் சேரி தலைமுறை வெல்லும் ......
...வெறி இறந்து போய் ...முறை வளரும் ....
....
மதமும் சாதியும்
..மொழியும் ...இனமும் ...
..தம் வெறிக்கதவை மூடிக்கொள்ளும்
..தம்ம முறை.... இதயம் செல்லும் ...
..அதையே ......என் பறை பாடி சொல்லும் ...



வீரமணி
இணைபேராசிரியர்
டெல்லி